சனி, 2 ஜனவரி, 2016

Posted by விகாரன் On 5:34 AM


ப்ரியகி
ஓர் அதி மனுஷி

வார்த்தைகளின் நகரத்தில்
வசித்துவந்தாள்

வானம் என்ற வார்த்தை அங்கே பரிச்சமற்றிருந்தது பதிலாக
மனம் என்ற வார்த்தையை தலைக்குமேலிருபதற்கு பெயரிட்டார்கள்
நகரத்தின் வெளியே கடலிருந்தது  அலைகள் எதுவுமற்று சலனமற்று
மெளனமாயிருந்தது

அங்கே  பெரும் மர்மமான  இரண்டில் ஒன்றாய் கடலிருந்தது
கடல் இறந்ததாய் இருந்தது.
 வார்த்தைகளின் நகரத்தில் அவளும் வார்த்தைகளும் மட்டுமேஉயிருடன் இருந்தனர்

பறவைகள் பற்றிய பழைய பாடல்கள் வழக்கிலிருந்தன
அவள் முன்பொரு பறவையாக இருந்தவளென்றே வாத்தைகள் நம்பினர்.

தேனீர் கோப்பைகளால் செய்யப்பட  பெருமாளிகையொன்றில் அவர்கள் வசித்தனர்
அவள்
வார்த்தைகளோடு உறங்கினாள்
வார்த்தைகளை முத்தமிட்டாள்
வார்த்தைகளையுண்டாள்
இவ்வாறு
வார்த்தையோடிருந்தாள் வார்த்தையாக இருந்தாள்
இறந்து போன வார்த்தைகள் அவளுடைய கண்ணீர் பூசப்பட்டு
கடலுக்கு அனுப்பப்பட்டன
கடலிலவை
 மீன்கள் என்று அழைக்கப்படுவதாய் நகரத்தில் ஒரு வதந்தியிருந்தது.

தினமும் வார்த்தைகளை கோர்பதும்
நெய்வதும்
தைப்பதும் போக
வார்த்தைகளுடன் தேனீர் அருந்துவாள்
தேனீருக்குள் இடுவதற்காகவே இனிப்பென்ற வார்த்தையை கைகளில் எடுத்து வருவாள்.

அவளிற்கு மெளம் பற்றிய பாடல்கள் பிரியமாய் இருந்தன
எனவே பாடுவதில்லை.
எனினுமவள் வார்த்தையாய் இருந்தாள்.
வார்த்தையோடிருந்தாள்.

ப்ரியகி ஒரு அதி மனுஷி.

-யதார்த்தன் -

2 கருத்துகள்:

  1. அசத்தல்... ஆழம்...
    அவளுக்கு மௌனம் பற்றிய பாடல்கள் பிரியமாயிருந்தன
    எனவே பாடவதில்லை
    எனினுமவள் ...!!!! *******

    பதிலளிநீக்கு
  2. // வார்த்தைகளின் நகரத்தில் அவளும் வார்த்தைகளும் மட்டுமேஉயிருடன் இருந்தனர்// +
    //நகரத்தில் ஒரு வதந்தியிருந்தது//
    இந்த வதந்தியை பரப்ப நகரத்தில் உயிரோடு யார் இருந்தனர் என்பது ஒரு நெருடல்.

    பதிலளிநீக்கு