வெள்ளி, 15 மே, 2015

Posted by விகாரன் On 6:42 AM




01.

”என்னை எங்கையாச்சும்  கூட்டிக்கொண்டு போடா இங்க இருக்க எனக்கு பிடிக்கேல “

அன்றுதான்  அவள்  வழமையை விட அதிகம் என்னிடம் உரிமை எடுத்துகொண்டாள். உள்ளூர ஒரு மெல்லிய மகிழ்வு கசிய தொடங்கியதை நான் உணர ஆரம்பித்தேன்.

எங்க கூட்டிகொண்டு போறது ?

எங்கையாவது தூரமா  .அங்க ஒருத்தரும் இருக்க கூடாது
நானும் நீயும் மட்டும் போதும்

“ம்ம்”

“என்னடா உம் கொட்டுற கூட்டிகொண்டு போ ”

சரி வா

“எங்க போறம் ?”

”தீவுக்கு ”

”தீவா ? எங்க இருக்கு ? “

”கடலுக்கு நடுவில ”

”டேய்  மாடு  என்ன ஜோக்கா ?  .தீவு எண்டா  கடலுக்கு நடுவில இருக்கும் எண்டு எனக்கும் தெரியும்.

“அப்ப ஏன்  கேட்டனி ?”

“சரி விடு நான் போறன் .”

“உடனே  மூக்கு மொளகா  ஆகிடும் மேடத்துக்கு ”

“ம்ம்”

“சரி வா  செல்லம்  போகலாம்”

“செல்லம் எண்டு சொல்லாத ”

“ம்ம் சொறி ….வா  போவம்”

சொறியும் சொல்லாத ..ம்ம்  வா


.02.

  “அடி கடற்கரை எப்பிடி இருக்கு ?

“ம்ம்  நல்லா  இருக்கு  ?”

சரி  தீவுக்கு போவம்

 “எப்பிடி நீந்தியா ? “

“இல்ல  போட்  இருக்கு  ”

”ஓ..எங்க ? “

“அங்க பார் அந்த பக்கம்  ”

“சின்னனா  இருக்கு பாய் எல்லாம்  கட்டி கிடக்கு ”

“ம்ம் பாய் விரிச்சு தான்  ஓடுறது”

“காத்தடிக்காட்டி  ?”

“துடுப்பு கிடக்கு ”

ஓ ….எனக்கு கடல் எண்டா பயம்
“எனக்கும்  தான் ”

உனகென்ன பயம் நீதான்  தீவுக்கு எல்லாம் போறியே .
போறனான் இருந்தாலும் பயம். கடல் வேற உலகம்.உலகத்தில நீர் பரப்பை விட நில பரப்பு தான் கூட .அதான் பயம். கிரிசாந்திட ஒரு கவிதை இருக்கு

என்ன கவிதை ?

“கடல் தண்ணீராலும்
 உப்பாலும் ஆனதல்ல
 கடல் கடலாலானது”


 “இப்ப நீ எனக்கு ஜோகிறபி கிளாஸ் எடுக்க போறியா இல்ல தீவுக்கு கூட்டி கொண்டு பொக போறியா ?”

“சரி வா போட்ல ஏறு”

”கைய குடுடி ”

”இல்லவேண்டாம்  ”

”சொன்னா கேக்கிறியா ? பார் விழுந்திட்ட ”

“பொடா பார்  நான்  நனனஞ்சிட்டன்”

வா துக்கி விடுறன்.

இல்ல வேண்டாம் நான் எறீட்டன்.

ம்ம்ஹிம்
.
"காத்து இல்ல நான் துடுப்பு போடுறன்  நீ கதைச்சிட்டு வா  எனக்கு களைப்பு தெரியாது."

தீவு எப்பிடி இருக்கும் ?

“சின்ன தீவு ”

“ஓ பேர் என்ன  ?”

“புரவித்தீவு”

“புரவி ந்னா குதிரை தானே ?”

“ம்ம்”

“எனக்கு குதிரைல ஏறோணும்ந்னு ஆசை ”

“தெரியும்”

அங்க குதிரை இருக்கா ?

“ம்ம் நிறைய ..என்னட்டயும் ஒண்டு இருக்கு ”

“புழுகாதை”

“ம்ம்ம்”

 “வேற என்ன இருக்கு ? “

 “ஒரு ஆறு  ஒரு போட்  ஹவுஸ் ”

 “போட் ஹவுசா ? “

 “ம்ம் ”

டேய்  கேரளால  இருக்குமே அது போலயா ?

“ம்ம்”

“ஐ …எனக்கு பிடிக்கும்”

“தெரியும் ”

 “போடா உனக்கு எல்லாம்  தெரியும்..புழுகன் “

 “ஹா ஹா “


03

 “ஏய் …தீவு வந்திட்டு இறங்கு “

“அதுக்குள்ளயா ? ”

“தூங்கு மூஞ்சி ”

”அச்சோ   நித்திரை ஆகிட்டனா ? ”

”ம்ம் மழை வாற மாதிரி கிடக்கு டி “

“ஐ மழை,…… எனக்கு பிடிக்கும்”

“அதுவும்  தெ…….. சரி விடு”


என்ன சொல்ல வந்த?
“தெரியும் ந்னு”

”சரி முறைக்காத  வா வேகமா போகலாம்  போட் ஹவுஸ் க்கு ”

 “போ நான் வரேல்ல   மழைல நனைய போறன். “

”அங்கையும் மழை  வரும்  நனையலாம் ”

 “என்னால நடக்கேலா .குதிரை வச்சிருக்கிறன் எண்டு புழுகின தானே .எங்க கூப்பிடு பாக்கலாம். “


“என்னடா கூப்பிட சொன்னா  என்ன செய்ற”

 “விசில் அடிக்கிறன் டி”

”எதுக்கு ?”

ஜலாலுக்கு .

ஜலாலா ?

“ம்ம்  ஜலாலுதீன்”

“ஓ உன் குதிரைக்கு பேரோ  ?”

 “ம்ம் “

”அதென்ன கேள்  குதிரையா ?”

”ஜலாலுதீன் ஆம்பிள பேர் “

இல்ல  விசில் அடிச்சியே அதான் கெட்டன்

”மட்டமான  கொமடி”

”போடா  போடா “

 “பார்  என் ஜலால “

”வெள்ளை குதிரை அழகா இருக்கு டா “

”ம்ம்”

”ஏத்தி விடு …இல்ல இல்லவேணாம்  நானே  ஏறுறன்.”

“இளவரசி தங்கள்  சேவகன் ஏற்றி விடுகிறேன்  பிறகு விழுந்து முஞ்சை முகரை எல்லாம்  உடைந்தால்  அடியேன்  மனமுடைந்து போவேன்”

“ஹா ஹா….சரி ஏற்றி தொலையும்”

”பாத்தியா எப்பிடி ஜம்முன்னு ஏறிடன்”

”ஹிம் தள்ளி இரு நானும் ஏறோணும்”
“மாட்டன்  போடா”

“இதென்ன கொடுமை நான் என்னெண்டு வாறது ?”
“நீ நடந்து வா ”

”பொச்சுடா உனக்கு வழி தெரியாதுடி ”

”சொல்லு நான் போறன் .”

”இல்ல நான் வரோணும்”
“ம்ம்ம்ம்  சரி”

04

“முட்டாம இரு உன் குதிரையை மெல்லமா  போக சொல்லு”

”மழை எப்படா வரும் ?”

”சொறி வருணபகவான் நம் பர் இல்லை என்னட்ட”

“ஹிம் போடா”

”போட் ஹவுஸ் எப்பாடா வரும் ?”

“அந்தா  ஆறு தெரியுதா ?”

”ஓ  நல்ல அகலம் மகாவலி மாதிரி இருக்கு”

”அந்த வளைவில பார் நிக்குது ”

”ஓ …சின்னனா தான்  தெரியுது  எப்பிடி இருக்கும்  ? “

”மூங்கிலால வளச்சு ஆர்ட்  வேர்க் பண்ணி இருக்கும்”

”உள்ள மூண்டு அறை போல செட்டப்பண்ணி  இருக்கு. ஒரு அறை கிச்சின்”

”இன்னொரு அறை கோல் பொல”

”மற்றது பெட் றூம் ”

” பெயிண்டிங்ஸ் இருகும் “

”என்ன பெயிண்டிங் ? “

”டாவின்சிட.. வான்கோட “

”என்ன மோனாலிசாவா ? ”

 “ம்ம் “

”வான்கோ யாரு  ? “

”பெயிண்டர் ”

”நான் என்ன ரைவர்  எண்டா சொன்னன். எருமை .”

”அவரும் ஒரு பெய்ண்டர்டி பேமசானவர். காதலிக்கு காதை வெட்டி குடுத்தவர்.”

”உனக்கு எப்ப பாத்தாலும்  காதல்…மண்ணாங்கட்டி….எல்லாரும்   லூசு பயலுகள் தான். “

”ஹா ஹா “

”ஏண்டி காதல் ந்னா  இப்பிடி வெறுப்பு உனக்கு ? “

”99 %  மான  காதல் பொய் தாண்டா..வேஸ்டு “

“சரி விடு ”

“மழை எப்படா வரும் ?”

 “வானம்  நல்லா இறங்கி வந்திட்டு நாங்கள்  போட் கவுஸ் போக முதல் வந்திடும்”

“ஐ தூறுது பாத்தியா நான்  சொன்ன உடனே வந்திட்டு”...

“பெய்யென பெய்யும் மழை”

என்னாடா  விளங்கேல ?

கவிதை

”ஆரம்பிக்காத உன் கவிதை கத்தரிக்கா எல்லாத்தையும் .


05

.குதிரையை  நிப்பாட்டு”

“ஏன் ?”

 “ஆத்தில குளிக்க போறன் “
”நீ கரைல நில் ஆறு ஆளமோ ?”

“இல்ல பயபடாம இறங்கு ”

 “என்னடா ஒரே புல்லா கிடக்கு ? “

 “அது சம்பு புல்லும் ஆம்பலும் ”

 “ஆம்பல் ? “

 “பூ “

”நான் குளிக்கிறன் ஆஞ்சு தா…..மழை பிலத்திட்டு ஐயா ஜாலி “
 “டேய் என்னடா தண்ணி சுடுது “

”மழை பெய்யேக்க ஆத்து தண்ணி சுடுற போல தான் இருக்கும்டி”

”ஏன்?”

”ஏன்னா  மழை தண்ணீ ஆத்து தண்ணியை விட வெப்ப நிலை குறஞ்சது அதால மழை பெய்யும் போது ஆத்து தண்னி சுடுற மாதிரி இருக்கும் “

“ஹிம்  இப்ப சயன்ஸ் கிளாஸ் ”

“சரி குளி  இண்டைக்காச்சும்”

“நீ ஆம்பல் புடுங்கி தா ”

”இந்தா தலயில வச்சு கோ”

”ஓகே…ஐஸ் கிறீம்  கிடைக்குமா ? “

“ஹிம் தண்னிதான் கிடைக்கும் அள்ளி குடி”

 “போடா நான் பரநாட்டிய  முத்திரை பிடிச்சு  நிக்க போறன். “

”ம்ம் “

 “நான்  எப்பிடி இருக்கன்”

“ஈரமா”

”போடா பண்ணி இரசனை கெட்டவனே”

 “சரி உண்மை சொல்லவா பொய் சொல்லவா ?”

”பொய் “

”அப்பிடின்னா சரி ஒரு சின்ன  நரேசன்  குடுக்கிறன் .”

”இடுப்பளவு தண்னீர் ல வெள்ளை சுடிதார் போட்டு ….ஆம்பல் சொருகின நீளமுடி ஈரமாகி மழை தண்ணீர்  சொட்டச்சொட்ட ஒவ்வொரு மின்னல்  வெட்டும் போதும் அந்த வெள்ளை ஒளில நீ ஒரு  ஒரு கடல் தேவதை போல இருக்க ..ஒரு திறி டி  பெயிண்டிங் மாதிரி  நிக்கிற…”

“ம்ம்ம்ம்ம்”
”……..”
”காணும் உன்ர பொய் ”

 “இப்ப உண்மை சொல்லட்டா ?”

” ம்ம் சொல்லு “

 “ரொம்ப நேரம்  இப்பிடியே நனைஞ்சா காய்ச்சல் வந்திடும்  வா  போவம் “

“கிரகம்  பிடிச்சவனே  போடா  …”


06

 “ ஹஹா “

 “சிரிக்காத வா  போட் கவுசுக்கு போவம் “

 “ம்ம் வா ”

 “நல்லா இருக்குடா  அழகா  வச்சிருக்க ”
 “ம்ம் தாங்ஸ் “

 “எனக்கு ரெஸ் மாத்தணும் . “

 “அந்த அறைக்க  இருக்கு போய் மாத்திட்டு வா ..நான் உனக்கு டி போடுறன். “

“ஓகே”

 “:என்னடா  எல்லாம் வைட் ரெஸ்சா  வங்கி வச்சிருக்க .உன் ஆளுக்கா …? “

”ம்ம் “

”ஏன்  உன் ஆளுக்கும் வைட் தான் பிடிக்குமா ? “

 “ம்ம்ம் “

 “சரி  ம்ம்ம்ம் கொட்டாம  டீ ய குடு “

”இந்தா “

“கை கால் எல்லாம்  நடுங்குதுடா”

”ம்ம்  நெருப்பு  தணல் தரட்டா ?”

”வேணாம் நீ யே  தேய்ச்சு விடு”

 “இல்ல  தணல் தாறன் “

”டேய் தேய்ச்சு விடு எண்டா தேய்சு விடு இல்லாட்டி விடு நா தாங்கிப்பன் “

 “நீதான்  கிட்ட வரவே  விட மாட்டியே இப்ப மட்டும் என்ன ? “
 “சரி நான்  போறன் போ “

“இந்த ஈகோ தான் டி பிரச்சினை  உனக்கு “

“நான்  ஒண்டும் ஈகோ இல்ல “

 “சரி விடு “

“விடேலாது”

”இப்ப என்ன செய்யோணும் ? “

”எல்லாரும் இப்பிடி தான் டா  “

 “என் பிரச்சினையை என்னோட மட்டும் கதை “

”நான் என்ன  இப்ப உன்னொட  பிரச்சினையா செய்யிறன் ? “

 “ஹிம் “

”என்ன ஹிம் ”

”அடி… “

 “என்ன…?.”


 “சொறி “

”தெவையில்ல “

”ம்ம் “

”நீ டீ  குடிக்கல “

”வேண்டாம்”

 “ம்ம் “

”சொறி “

”எதுக்கு ? “

 “இப்ப கட்டாயம் சொல்லணுமாடா உனக்கு காரணம் ?”

”ம்ம்”

”ம்ம்”
”அடி ஒண்டு கேக்கவா ?”

ம்ம்

”உலகத்துக 99%  லவ் பொய் எண்டு  சொல்லுவ தானே ..?? “

”ம்ம்ம்ம்”

 “நாம அந்த 1 % மா  இருக்கலாமா ? “

…….
………
………..
……
…….
”அம்மா கூப்பிர்ரா நான் பிறகு chat பண்ணுறன் பாய்”

”ஏய் பதில் சொல்லிட்டு போ”

பதில் அனுப்பியிருந்தாள்

ஒற்றை ஸ்மைலி

 :)

சார்ச் அற்றவென் அன்ரோய்ட் போன்  மெல்ல அணைந்தது.


-யதார்த்தன் :)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக