01.
ஒன்பதாம் வேற்றுமை
02.
ஊமைச்சொல்
குருட்டுக்கவிதை
கண் மொழி
நீ
நான்.
03.
பேரழுகை
கண்களில் முத்தம்
கண்ணீர் உப்பு
அமிதம் உவர்ப்பு
04.
இதயத்தின் சீழ்
கண்ணீர்
பிரிவின் புண்
கண்
05.
நனைந்த இமைகளில்
காலத்தை நெய்யும்
தறியின் சத்தம்
06.
புத்தன் போகத்
தூர்ந்த
யசோதாவின் கண்
உனக்கு
07.
கடைசி செங்கல்லின்
கீழ் மறையும் அனார்கியின்
கண்கள் எனக்கு
08.
இறுக்கி மூட
உள்ளே
உள்ளே
மீண்டும் மீண்டும்
மூடும் கண்கள்
பிரிவின் கண்கள்
09.
கண் மெளனம்
மோகம் கண்
10.
சங்கீதம் ஒலிக்க
மீண்டும் எழும்
மெல்ல உன்
முட்டைக்கண்கள்.
-யதார்த்தன்


0 கருத்துகள்:
கருத்துரையிடுக