வியாழன், 3 ஜூலை, 2014

Posted by விகாரன் On 7:55 PM
 
நீ 
மிகச் சாதாரணமாய் 
செத்துப் போவாய்
ஏதோ ஒரு கடுகதி ரயிலடியோ
ஆலகால விஷமோ
எதோ ஒன்றால்
மிகச்சாதாரணமாய் அரங்கேறி இருக்கும்
உன் சுய உயிர் கொல்லும் இன்பம்.

எச்ச மாய் ஒரு கடிதம்
இலக்கண தமிழில்
அவளை மையம் கொண்டு
எழுதி இருப்பாய்
அவள்
பெயர் குறிப்பிடாமல்.
இருக்கும் சில சமயம்
இப் பெருந்தன்மை உள்ள
நீ
மிக்சாதாரணமாய் செத்து போய் இருப்பாய்

கடிதம்
காதலியாகி கசிந்துருகி
கிடக்கும்
இறுதி வரிகளில் மட்டும்
பெற்ற கடன்களுக்கும்
கூட பிறந்த கடன்களுக்கும்
வட்டி கட்டி எழுதி இருப்பாய்
ஏதாவது சில வார்த்தைகள்
அதிலும்
ஒன்று ”அவளை திட்டாதீர்கள்” என்று இருக்கும்
ஆயினும்
நீ மிகச்சாதாரணமாய்
செத்து போய் இருப்பாய்

உன்
உடல் காக்கி சட்டைகளும்
நீதிமன்றங்களும்
புடைசூழ கிழிக்கப்படும்
நீ
அவளை வைத்திருந்ததாய் சொல்லப்பட்ட
இதயம் உட்பட,
அதனால்
உனக்கு என்ன
நீ மிகச் சாதாரணமாய்
செத்து போய் விட்டாய்

அவள்
மேல் குற்றமில்லை
பாவம்
ஒரு மாகா கோழையை
காதலித்த பாவம்.
உலகம் எதிர்த்தாலும் நின்னை
கரம்பிடிப்பேன்
என்று வசனம்
பேசிய பாவம்
உனக்கு இது தெரியாது
நீ சாதாரணமாய் செத்து போய் இருப்பாய்

பெரும்பாலும்
அவள் நிலைக்கு
அவள்
பொறுப்பு இல்லை
ஆயிரத்தெட்டு காரணம்
அவள்
சித்தத்தை சிதைத்து
இருக்கும்
பெரும்பாலும்
வழமை போல்
சாதியும் சமயமும்
குலமும் குடுப்பமும் செல்வாக்கு செலுத்தும்

அடி முட்டாளும் பழிக்க தக்க
கோழை நீ
உனக்கு தெரியாது
உன் பெற்ற வயிறும்
தோள்கொடுத்தவனும்
கதறுவது
ஏன் உன் இதயம் வாங்கி
திரும்ப தந்தவளை
குற்ற உணர்வும்
காதலும் ஒப்பந்தம் போடு
தவணை முறையில் கொல்ல போவதை
நீ அறியாய்
உன் நாராசமான பெயர்
ஒன்றும் அறியா அவள் குழந்தைக்கு இடப்பட இருப்பது
அதிக பட்ச கொடுமை
உனக்கு இவை தெரியாது
நீ தான் மிகச்சாதாரண மாய் செத்து
போய் விட்டாயே

வருத்த படாதே
உனக்காக இரங்கவும்
உன்னை காதல் ராஜ்ஜியத்தின்
நிரந்தர இளவலாய்
பட்டாபிஷேகம் செய்யவும்
ஒரு கூட்டம்
கிளம்பும்
ஏன் எனின்
அவர்கள் அகராதியில்
உன் காதல் புனிதமான தாயிற்றே
பாவம் நீ இதைக்கூட அறியாய்
நீ தான் மிகச்சாதாரணமாய்
செத்து போனாயே.

-யதார்தன்

Posted by விகாரன் On 7:52 PM

இந்த
தனிமையை என்
திரண்டெழுந்த
தோள்களில் தாங்கி நிற்கிறது
காலம்

எனினும்
இதயம்
காற்றுமட்டும் துருப்பிடித்து கிடக்கும்
குறுஞ் சந்துகளில் பிதுங்கி நின்று
பகிரங்கமாய்
தன் கனவுப்பாடல்களை
பிரவாகிக்கிறது

துமியாய்..!
துளியாய்!!!!
நதியாய் !!!!!!!
இப்படியாய்

சம பொழுதில்
நான் இருளை போர்த்திகொள்கிறேன்
எனினும்
போர்வை நனைந்து
குளிர்ந்து
துவண்டு
தேங்கி நிற்கும் கனவுமீது

படிகிறது படிகிறது படிகிறது

குறுஞ்சந்துகள்
மெல்ல
மெல்ல
மெல்ல
மெ
ல்

எதுவுமில்லை யாகின்றன..!!!

-யதார்தன்
Posted by விகாரன் On 7:50 PM
மரணகாலத்து முத்தங்கள்
.................................................
கடைசியாய்
புறப்பட்டு வந்த
தெருவில் தான்
உன் முத்தங்களை வீசி விட்டு
வந்தேன்
ஏன்
என்று கேட்காதே
பதில் களின் பையில்
தான் அவற்றை போட்டு எறிந்து விட்டேன்
விடு
அது கிடக்கட்டும்
வா
மரணகாலத்துக்கு முன்
மீண்டும்
மீண்டும்
முத்த மிட்டு கொள்வோம்
இம்முறை
உதடுகளில்
மீதமுள்ள கறள்களை
உடைத்தே ஆகவேண்டும்..!!

-யதார்தன்

.................................................
கடைசியாய்
புறப்பட்டு வந்த
தெருவில் தான்
உன் முத்தங்களை வீசி விட்டு
வந்தேன்
ஏன்
என்று கேட்காதே
பதில் களின் பையில்
தான் அவற்றை போட்டு எறிந்து விட்டேன்
விடு
அது கிடக்கட்டும்
வா
மரணகாலத்துக்கு முன்
மீண்டும்
மீண்டும்
முத்த மிட்டு கொள்வோம்
இம்முறை
உதடுகளில்
மீதமுள்ள கறள்களை
உடைத்தே ஆகவேண்டும்..!!

-யதார்தன்
Posted by விகாரன் On 7:47 PM
காட்டுக் கூச்சல் பற்றிய துதி
..............................................................
.

நிறையச் சாப்பிடும்
பெரிய ஏழையின் 
காட்டுக்கூச்சல்.!!

டேய்
நீ பிறந்த தினத்தில்
நான் பிறந்த போது
பலர் எனக்கு பெயரிட்டனர்
நான்
இன்னும் வைத்து கொள்ளவில்லை
ஆதலால்
உனக்கு சொல்ல பெயரில்லை!!

எப்போதாவது
நீ
உண்ணும் போது
கண்ணாடியில் பார்த்ததுண்டா
உன் உடைபோட்ட
என் பிம்பம்
உணவுண்பதை !!

சரி விடு
உனக்கு
விசாலமான கட்டில் இருக்கிறது
ஒரு முறை உன்
பெரு வீட்டில்
களவாட வந்த போது
கண்டிருக்கிறேன்
நான்
உறங்குவதில்லை
நீ புசித்த இராத்திரிகளை
போர்த்தி கொள்ள
இஸ்ரமில்லை
துளிகூட.!!!

அன்று ஒரு இரவில்
உன் ஆசை நாயகி
ஒருத்தி
இவ்வாறு சொன்னாள்
பூமியில் கால்களை கொளுவிக்கொண்டு
வானத்தை நோக்கி தூங்கும்
வெளவால் நீ என்று
இன்றுவரை அதற்கு அர்த்தம் புரியவில்லை
உனக்கேதும்
புரிகிறதா ?

ம்ம்ம்
முகம்சுழிக்கிறாயா?
என் கண்ணீர் துர்வாடை
வீசுகிறதா?

அடேய்
உன்னை தான்
பரத்தையரை
முத்தமிடுவதை முதலில் நிறுத்து!!!!
கீழே பார்
உன் அரியாசனத்தில்
காயம் பட்டு
கறுப்பு குருதி
நம் நீறிப்போன
சிதையை எரிக்கிறது மீண்டும் ..!!!!

-யதார்தன் –
16.06.2014