அனுக்குட்டி என்னிடம் கதை கேட்கும் அழகே அலாதியானது. தன் பிஞ்சுக்கால்களை நெஞ்சிலூன்றி ஏற்றனவே துளையுள்ளவென் இதயத்துக்கு நேரே ஏறி அமர்ந்துகொள்வாள். இரண்டு வயதுக்கு மீறிய எடை அவளிடமிருக்கும் . நன்றாக சப்பணம் இட்டு அமர்ந்துகொண்டு முட்டைக்கண்ணை சிமிட்டுவாள். லேசாய் மூச்சடைக்கும் மெல்ல அவள் பாரம் பழகிவிடும். நான் உடலை அவளின் தேகத்தை தாங்குவதற்கு தயார்ப்படுத்தும் போது அவள்
“டேய் கச டொல்லு
”
என்பாள்.எப்போது
அதே சுர இசையுடன் அவள் கேட்கும் போது மிகப்பிரியமான ஒரு உணர்வு அவள் மெத்தென அமர்ந்திருக்கும்
நெஞ்சுக்குள் பரவிச்செல்வதை உணர்வேன்
சிறிது நேரம் அவள்
என்னுடன் எதுவும் பேசவில்லை, அந்த டயரியை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டாள். முகர்ந்து
பார்த்தாள் , தன் சிவந்த பிஞ்சுச்சொண்டினால் (உதடுகள்) அதன் விளிம்பைக்கடித்தாள். சட்டென்று
அந்த டயரியை இறுக்கி அணைத்துக்கொண்டாள். இறுதியாய் யாருடைய ஸ்பரிசத்திற்கு அது பழக்கப்பட்டிருந்ததோ
அந்த குணங்குறிகளை , மெல்லுணர்வினை , வாசத்தை , சுவையை , அந்த டயரியில் நானும் உணர்ததுண்டு.
என்னை விட அனுகுட்டிக்கு அதன் நெருக்கம் ஸ்பரிசம் என்பன இன்னும் கிளர்ச்சியையூட்டி
இருக்க வேண்டும் , அதனை இறுக்கமாக நெஞ்சுடன் அணைத்துக்கொண்டு தலையை டயரி விளிம்பில்
சாய்த்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.
இத படி” என்றாள்
முதல் பக்கம்
“ஓர் இதயம் கருக்கொள்கிறது”
-திரடத்தூய்மன்
–
“அதென்னா பேர் ?
“என்ர முதல் புனை
பேர் ”
“எத்தினை மாத்துவ
?”
“ரெண்டுதான்”
“லூசு தானே நீ”
“ம்ம்”
“என்ன எழுதி வச்சிருக்க
”
“கவித”
பக்கத்தை உருட்டினாள்”
“ஏன் கொஞ்ச பேப்பர
கிளிச்சு வச்சிருக்க ?”
“கிளிச்சதெல்லாம்
அனார்க்கிக்கு முதல் எழுதினது”
“ம்ம்”
அனார்க்கிக்கு
எழுதியவற்றின் கீழ் நான் என்னுடைய பெயரை எழுதவில்லை என்னுடைய பெயர் இல்லாத அவளுக்கான
கவிதைகளின் கீழ் தன் அழகான கையெழுத்தால் என்னுடைய பெயரை கிறுக்கியிருந்தாள்.
அனு தன் பிஞ்சு
விரல்களால் அனார்க்கியின் எழுத்துக்களை தடவியபடி
“வடிவான எழுத்து”
”எது அனாக்கிக்கு
எழுதின முதல் கவித ? “
அதை அவளே தன் கையால்
எழுதியிருந்தாள்
அந்த கானல் நதியை
கடந்து வா
விரைவாய்
என் ஓடத்தின் இரண்டாம்
துடுப்பு உனக்காய்
காத்திருக்கு.
-திரடத்தூய்மன்
–
மேலும். பக்கங்களை
புரட்டினாள்.
கவிதைகள்
கவிதைகள்
கவிதைகள்
கடைசிப்பக்கத்துக்கு
முதல் பக்கம்
அவள் வைரமுத்துவின்
பாடல் வரிகளை பென்சிலால் எழுதி தன் பெயரை கீழே கிறுக்கி திகதியிட்டிருந்தால், அடிக்கடி
அவள் முணுமுணுக்கும் பாடல் என்று அனுவிற்கு சொன்னேன் , அனு சிரித்தாள்.
ஏன் இத அவளிட்ட
இருந்து வாங்கின்னி ?
எவ்வளவு கொடுமையான
நாளாக அமைந்து விட்டது அது. அவளை வார்த்தைகளால் காயப்படுத்தி விட்டு இறுதியாய் ஒரு
பெரிய வாளை எடுத்து வீசினேன். இன்னும் ஆயிரம் வருஷங்கள் நரகத்தில் உழ அந்த வார்த்தை
கொண்டுவந்த பாவமே போதுமாயிருந்தது.
“என்ர கவிதை புத்தகம்
உன்னட்ட இருக்கு , அத வச்சிருக்கிற தகுதி உனக்கு கிடையாது குடுத்து விடு”
அனு என்னை பார்த்தாள்
, அவளுடைய கண்களுடன் என்னுடைய கண்கள் சந்தித்தன, அவளுடைய கண்களை பார்க்க கூசியது, தலைக்குளிருந்து
பெருங்கூச்சலொன்று எழுந்தது கண்களை இறுக்கி மூடிக்கொண்டேன்.
திறந்த போது ,
அனு அப்போது கடைசி
பக்கத்தை சுட்டிக்காட்டினாள், அனார்க்கி ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதியிருந்தாள்.
death has got
something to be said for it . there is no need to get out of bed for it.
wherever you may be
they bring it
to you free.
நான் அதை சத்தமாக
படித்து முடிக்கவும் , அனு அந்த டயரியை என்னிடமிருந்து விடுக்கென பிடுங்கிக்கொண்டு வேகமாய் என் நெஞ்சிலிருந்து
இறங்கி அருகில் இருந்த கட்டிலில் ஏறி அந்த டயரியை தன் நெஞ்சோடு அணைத்துகொண்டு , கண்களை
இறுக்கி மூடிக்கொண்டாள்.
யதார்த்தன்
2015.may.03



0 கருத்துகள்:
கருத்துரையிடுக