வியாழன், 3 ஜூலை, 2014

Posted by விகாரன் On 7:47 PM
காட்டுக் கூச்சல் பற்றிய துதி
..............................................................
.

நிறையச் சாப்பிடும்
பெரிய ஏழையின் 
காட்டுக்கூச்சல்.!!

டேய்
நீ பிறந்த தினத்தில்
நான் பிறந்த போது
பலர் எனக்கு பெயரிட்டனர்
நான்
இன்னும் வைத்து கொள்ளவில்லை
ஆதலால்
உனக்கு சொல்ல பெயரில்லை!!

எப்போதாவது
நீ
உண்ணும் போது
கண்ணாடியில் பார்த்ததுண்டா
உன் உடைபோட்ட
என் பிம்பம்
உணவுண்பதை !!

சரி விடு
உனக்கு
விசாலமான கட்டில் இருக்கிறது
ஒரு முறை உன்
பெரு வீட்டில்
களவாட வந்த போது
கண்டிருக்கிறேன்
நான்
உறங்குவதில்லை
நீ புசித்த இராத்திரிகளை
போர்த்தி கொள்ள
இஸ்ரமில்லை
துளிகூட.!!!

அன்று ஒரு இரவில்
உன் ஆசை நாயகி
ஒருத்தி
இவ்வாறு சொன்னாள்
பூமியில் கால்களை கொளுவிக்கொண்டு
வானத்தை நோக்கி தூங்கும்
வெளவால் நீ என்று
இன்றுவரை அதற்கு அர்த்தம் புரியவில்லை
உனக்கேதும்
புரிகிறதா ?

ம்ம்ம்
முகம்சுழிக்கிறாயா?
என் கண்ணீர் துர்வாடை
வீசுகிறதா?

அடேய்
உன்னை தான்
பரத்தையரை
முத்தமிடுவதை முதலில் நிறுத்து!!!!
கீழே பார்
உன் அரியாசனத்தில்
காயம் பட்டு
கறுப்பு குருதி
நம் நீறிப்போன
சிதையை எரிக்கிறது மீண்டும் ..!!!!

-யதார்தன் –
16.06.2014

0 கருத்துகள்:

கருத்துரையிடுக