ஞாயிறு, 29 டிசம்பர், 2013

Posted by விகாரன் On 11:35 PM



துர் மணம்
வீசும்
இரண்டு
தேவதைகளின்
இரத்தம்
நான்  தொலைந்து போனதாக‌
சொல்லப்பட்ட இடத்தில்
இன்னும்
காயாமல்
கிடக்கிறது

நீதி தேவதை
என்று
சொன்னவளோடு சேர்ந்து
நான்
சில
குற்றம் செய்திருந்தேன்
அதன் பொருட்டே தொலந்து போகச்செய்யப்பட்டேன்
என்று
அறிக்கை யிட்டு,
என் தாயின்
கையெழுத்தை
யாரோ
வைத்திருந்தார்கள்
அடிக்கோட்டுடன்

என்
அவர்கள்
என்
நான்
எல்லோரும்
காணாமல்
போகப்பட்ட‌
இடத்தில்
இன்னும் ஈரம் காயாமல்
காலடித்தடங்கள் சிலது,
கடவுள்
செருப்பு
அணிவதில்லை
என்று  கேள்வி


என்னுடன் சேர்ந்து

செய்த  நீதியின்
தேவதை
பக்கத்தில்
தான் கிடந்தாள்
சற்றுமுன் தான்
எழுந்துபோனாள்
இன்னும்
காந்தாரியாகத்தான்
போகிறாள்

பாவம்



எனக்கு போக ப் பிடிப்பிலை
சரி
நான் எங்கே கிடக்கிறேன்
சுவர்கம்
அல்லது
நரகம்?

அல்லது இலங்கை ?????!!!!!!

2 கருத்துகள்:

  1. ஆரம்பம் முடிவு எப்போதும்போல கச்சிதம். இடையிடையே கவிதை தொக்கி நிற்கின்றது. அடுத்த படைப்பில் அவ்வாறு இருக்காதென்று நம்புறன். வாழ்த்துக்கள் தம்பி.

    பதிலளிநீக்கு