வியாழன், 19 டிசம்பர், 2013

Posted by விகாரன் On 11:18 PM
    யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு நெய்தல் நிலங்களும் தமக்கென அமைந்த சிறப்பான சரித்திர இருப்பினையும்  பண்பாட்டு தொடர்ச்சியையும்  கொண்டவை. குறிப்பாக யாழின் கிழக்கு  கடல்புறம் உள்ள நெய்தல் கிராமங்களும் இன்றும் பண்பாட்டின் முக்கிய கூறாகவிளங்குகின்றன. அத்தகையதொரு கிராமமாகவே இருக்கிறது  மணற்காடு கிராமமும்.
  கடல்வளம்,சுனாமியின் வடு, தொல்லியல் என்று வெளி உலகினால் அறியப்பட்ட  மணற்காடு பண்பாட்டு இருப்பு உள்ளதொரு இடமாகவும் அடையாளம் பெறுகின்றது. மணலோடு அமைந்ததால் இக்கிராமம்
மணற்காடு என்று பெயர் பெற்றது.

நிலமும் கடலும் தொழிலும்

 மணற்காடு  கிராமம் கடல்வளம் மிக்க யாழ்ப்பாணத்தின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் அமைந் துள்ளது . ஆதாலல் கிராம மக்கள் கடலை அடிப்படையாக  கொண்ட  பொருளாதார மற்றும் சமூக  இருப்பிற்கே பழக்கப்பட்டு  இருகின்றார்கள்.மீன்பிடியும் அதனோடு சேர்ந்த வியாபாரமும் இங்கே பிரதான சீவனோபாயமாக காணப்படுகின்றது.
 ஆரம்பகாலங்களில் கட்டுமரங்களை  கொண்டு மீன்பிடியை மேற்கொண்ட  மக்கள்  இப்போது இயந்திரப்படகுகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பதோடு கரைவலை உள்ளிட்ட மீன்பிடித் தொழில் நுட்பங்களை பயன்படுத்து கின்றனர். நீண்டு நிலைத்த ;போரும்,2004இல் ஏற்றபட்ட சுனாமி  என இப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்தே வருகின்றனர்.
குடும்பங்களும் சமூகமும்
 மணற்காட்டின் எல்லைக்குள்  இன்று சுமார் 288குடும்பங்கள் இருக்கின்றன என்கிறார் ஊர்த்தலைவர் பேதுறுப்பிள்ளை ஜெபனாஸ். பெரும்பாலும் கருக்குடும்பமாகவே காணப் ;படுகின்றன. மிக நெருக்கமாக  வாழ்வதனால்  நகரம் போல் பக்கத்து வீடு தெரியாமல் இருக்கவில்லை இவர் கள்.இங்கிருக்கும் ஒவ் வொருவரும் எல்லொரையும் அறிந்துள்ளனர். ஒற்றுமையோ  பகைமையோ  ஏதோ  ஒரு  தொடர்பு இருக்கின்றது யாவர்க்கும். இதனால் மணற்காட்டின் சமூக தொடர்பாடல் ஆரோக்கிய மானதாகவே  இருக்கின்றது. கல்வியைப் பொறுத்தமட்டில் யாழ்ப்பண  மத்திய  மற்றும் நகரப்பகுதிகளைப் போல் வளர்ச்சியடைந்த கல்வி  மட்டம்  மணற்காட்டில் காணப்படவில்லை. ஆயினும் அடிப்படைக்கல்வி  இன்றி இங்கு  யாரும் இல்லை.
  'ஆரம்பக்கல்வியை கற்ற பிறகு 17, 18 வயது முதல் தங்கள்  தந்தையை  அல்லது குடும்ப உறுப்ப்பினர்களைப் பின்பற்றி கடல் தொழிலுக்கே சென்று  விடுகின்றனர். ஆனால் அது கூட  தவறு என்று  முழுதாக மறுத்து விட முடியாது. குடும்பங்களின் பொருளாதார சிக்கல் பிள்ளைகளை கல்வியை தொடர விடுவதில்லை'என்று  ஆதங்கத்துடன் சொல்கிறார் மணற்காடு றோ.க.பாடசாலை அதிபர் வாகீசன்.
ஆயினும் இன்று தாய்தந்தையருக்கு பிள்ளைகளின் கல்வி பற்றிய  விழிப்புணர்வுகளை  பாடசாலை  சமூகமும் அரசாங்கமும் செய்து வருவதானால் கடந்த 5 வருடத்தில் ஒரு மாணவன் பல்கலைகழகம் சென்றுள்ளார். இவ்வருடம் முதன்முதலாக மாணவன் ஒருவன் புலமைபரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்று இருப்பது நம்பிக்கை அளிப்பதாகவும் அதிபர்  மேலும் தெரிவித்தார்.


  சமயமும் நம்பிக்கைகளும்

  மணற்காடு கிராமம் முற்றுமுழுதாக ரேமன்கத்தோலிக்க சமயத்தை பின்பற்றுகின்ற மக்கள் வாழும் இடமாக காணப்படுகின்றது. புனித  பீட்டர் தேவாலயத்தை  கட்டி ஐரோப்பிய மிசனரிகள் உருவாக்கிய சமய நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு இக்கிராமத்தவர்களின்  இறையியல் கட்டமைக் கப்பட்டுள்ளது.
  இக்கிராமத்தில் அனைவரும் தெய்வ நம்பிக்கை மிகுதியாய் உள்ளவர்களாகவும் தேவாலய  பாதிரியாரை பெரிதும் மதிப்பதுடன் அவரின் ஆற்றுப்படுத்தல்களையும் போதனைகளையும் பின்பற்ற  முயல்கின்றனர். கிறிஸ்மஸ், பெரிய வெள்ளி போன்ற சமய  நிகழ்வுகள்  இங்கு வெகு சிறப்பாக நடை பெறுவதாக கிராமத்தவர்கள் கூறு கின்றனர்.அத்துடன் அவர்கள் இதர  சமயத்தவர்களுடன் நல்லதொரு புரிந் துணர்வையும் கொண் டுள்ளனர். கிராமத்தின் அருகில் இருக்கும் இந்துக் கோவிலான வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் உற்சவங்களில் தாம் உற்சாகமாய் கலந்து  கொள்வதாக கூறுகின்றனர் மணற்காடு மக்கள்.
அபிவிருத்தி மற்றும்    வெளித் தொடர்புகள்
 2004 ஆம்  வருடம் இந்துக்கடலை  உலுக்கிய சுனாமிப் பேரலையில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது மணற்காடு. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக  அரசும் இதர அரசசார்பற்ற நிறுவனங்களும் நீட்டிய  உதவிக்கரங்களை  பற்றிப் பிடித்தும் தங்களின் உழைப்பாலும் மெல்ல மெல்ல  வளர்ந்து வருகின்றது இக்கடலோர கிராமம் .நகர  பகுதியை  விட்டு  விலகி இருப்பதானாலும் சரியான போக்குவரத்து இன்மையாலும்  இதன் அபிவிருத்தி மந்தம் கொண்டு இருக்கிறது.
இன்று இக்கிராம மக்கள் வேண்டிநிற்பதெல்லாம் தேவையான போக்குவரத்து, கல்வி, மருத்தவ வசதிகளைத் தான்.ஒரு சிறு நிலப்பகுதியில் ஒரே  ஒரு நிரந்த  கட்டடமும் சிறிய நிலப்பகுதியும் கொண்டு  இருக்கும்  மணற்காட்டு பாடசாலை வளப்பற்றாக் குறையுடன் இயங்கி வருவதாக பாடசாலை அதிபர் தெரிவிக்கிறார். அரச கல்வி திணைக்களங்களிடம் இது பற்றி  கூறி இருப்பதாகவும் அவைகள் இதற்கு தகுந்த  நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி
உள்ளதாயும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

     முக்கியத்துவம்

அழகான கடற்கரை, சவுக்கு காடு, மண்வளம், என்பனவற்றுடன் வரலாற்று  சுவடுகள்; பலவும் புதைந்து கிடக்கும் தொல்லியல் இடக்கூறாகவும் மணற்பாடு பிரகடனம்  செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள  மணல்பிட்டி ஒன்றில் புதைந்துள்ள  பழைய  தேவா லயத்தை   இலங்கை  மரபுரி மைகள் காப்பகம் தொல்லியல் இருப்பென அறிவித்து உள்ளது. அங்கு ஆராய்ச்சிகளும் நடத்த படுகின்றன.
இவ்வாறான காரணங்களால் மணற்காடு  சிறந்த  கடல் வளம்  மிக்க சுற்றுலாத்தலமாகவும் மாற முனைகிறது  இது ஆரோக்கிய மானதொரு  வளர்ச்சி யாகும்.மணற்காட்டினை  போல்  நகர அமைப்புக்களுக்கு வெளியே காணப்படும் பண்பாடும் சிறப்பும் வாய்ந்த கிராமங்களே நம் நாட்டின் உண்மையானதும் அழகானதுமான முகங்களாகும்.

-யதார்தன் -(குணரட்ணம் பிரதீப்)

1 கருத்து: