01
உன்னுடைய பூனையை
எனக்கு தெரியாது
எனக்கு தெரியாது
02.
அது இறந்து விட்டது
03
உன் பூனை எலிகள் பிடிப்பதுண்டா ?
இரண்டையும்
எனக்கு பிடிப்பதேயில்லை
இரண்டையும்
எனக்கு பிடிப்பதேயில்லை
04
நீ இரண்டு உலகங்கள் உண்டென்பாய்
சுவற்றிக்கு உள்ளேயுள்ளவுனது உலகில்
அதுவொரு முக்கிய பிரஜையாக இருந்திருக்க வேண்டும்.
சுவற்றிக்கு உள்ளேயுள்ளவுனது உலகில்
அதுவொரு முக்கிய பிரஜையாக இருந்திருக்க வேண்டும்.
05
சகி
தனிமையிலிருப்பதாய் கூறுமென்
அத்தனை தோழிகளும் பூனையொன்றை வளர்ப்பதாய்
ஏன் ?
சொல்கிறார்கள்.
தனிமையிலிருப்பதாய் கூறுமென்
அத்தனை தோழிகளும் பூனையொன்றை வளர்ப்பதாய்
ஏன் ?
சொல்கிறார்கள்.
06
இதிலிருந்து மீண்டவுடன் எனக்கொன்று சொல்ல வேண்டும்
ஏன் அதற்கு idiot
என்று பெயர் வைத்தாய் ?
ஏன் அதற்கு idiot
என்று பெயர் வைத்தாய் ?
07
இதற்காக
யாரை தண்டிக்க போகிறாய்
எதிர்வீட்டு நாயை ?
உன் அம்மாவை?
அல்லது உன்னை நீயே ?
யாரை தண்டிக்க போகிறாய்
எதிர்வீட்டு நாயை ?
உன் அம்மாவை?
அல்லது உன்னை நீயே ?
08
நீ சிரிக்கத் தொடங்கியவுடன்
என்னை தவிர
யாரும் உனக்கொரு பூனையை பரிசளிக்கலாம்.
என்னை தவிர
யாரும் உனக்கொரு பூனையை பரிசளிக்கலாம்.
09
மூச்சும் விடமுடியா கொழும்பின்
கட்டட காட்டினுள் அதை
எங்கே புதைத்தாய் ?
கட்டட காட்டினுள் அதை
எங்கே புதைத்தாய் ?
10
ப்ரியசகி
ஒன்பதாவது கவிதைக்காக
என்னை சபித்திவிடு
ஒரு பூனையாகிவிடும்படி.
ஒன்பதாவது கவிதைக்காக
என்னை சபித்திவிடு
ஒரு பூனையாகிவிடும்படி.
-யதார்த்தன் –(pratheep kunaradnam)
25.07.2015
4.06 am
25.07.2015
4.06 am
0 கருத்துகள்:
கருத்துரையிடுக