ஞாயிறு, 29 டிசம்பர், 2013

Posted by விகாரன் On 11:35 PM



துர் மணம்
வீசும்
இரண்டு
தேவதைகளின்
இரத்தம்
நான்  தொலைந்து போனதாக‌
சொல்லப்பட்ட இடத்தில்
இன்னும்
காயாமல்
கிடக்கிறது

நீதி தேவதை
என்று
சொன்னவளோடு சேர்ந்து
நான்
சில
குற்றம் செய்திருந்தேன்
அதன் பொருட்டே தொலந்து போகச்செய்யப்பட்டேன்
என்று
அறிக்கை யிட்டு,
என் தாயின்
கையெழுத்தை
யாரோ
வைத்திருந்தார்கள்
அடிக்கோட்டுடன்

என்
அவர்கள்
என்
நான்
எல்லோரும்
காணாமல்
போகப்பட்ட‌
இடத்தில்
இன்னும் ஈரம் காயாமல்
காலடித்தடங்கள் சிலது,
கடவுள்
செருப்பு
அணிவதில்லை
என்று  கேள்வி


என்னுடன் சேர்ந்து

செய்த  நீதியின்
தேவதை
பக்கத்தில்
தான் கிடந்தாள்
சற்றுமுன் தான்
எழுந்துபோனாள்
இன்னும்
காந்தாரியாகத்தான்
போகிறாள்

பாவம்



எனக்கு போக ப் பிடிப்பிலை
சரி
நான் எங்கே கிடக்கிறேன்
சுவர்கம்
அல்லது
நரகம்?

அல்லது இலங்கை ?????!!!!!!

திங்கள், 23 டிசம்பர், 2013

Posted by விகாரன் On 2:54 AM

Add captio
வா
மெல்ல மெல்ல‌
உன் விழிகளுடன்
ஏனைய
புலன்களையும்
என் தோள்களில்
தீட்டி
கூராக்கு
பிறகு
மெல்ல  நகந்து
வழிந்து வழிந்து இறங்கு

பார்
என்னை
என் எல்லைகளை
உள்ளே
வெளியே
எனும் இரு
நிலைகளின்
வரையறுப்புக்களை
கடந்துகிடக்கிறது

உணர்
போருக்கு
தயாரான இரண்டு
தேசக்களுக்கு
இடைப்பட்டு
கிடக்கும்
சூனிய பிரதேசமாக‌
கிடக்கிறது நம்
நம் காமம்


புணர்
அச்சூனிய பிரதேசத்தை
அழுக்காக்கும்
படி புணர்
நான்  உனை போலில்லை
இனியாவது எனக்கு
கன்னி கழியட்டும்


குறித்துக்கொள்
நான்
கடவுள்
நீ விபச்சாரி.
இது
ஒரு சாதாரண  இரவு.


-யதார்தன்-
Posted by விகாரன் On 12:24 AM


– ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வரும் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.  சிந்துசமவெளி பற்றிய ஆய்வில் முக்கியமானவர், அவரது ஊர்பெயரியல் ஆய்வு குறித்த அறிமுக கட்டுரை
•••
மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.
ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.
பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.
இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன. ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.
சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.
நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.
அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.
தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…
4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன.
எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.
பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன.
இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களை இழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.
சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.
சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.
(வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.)
தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.
தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
எழுத்து : எஸ்.ராமகிருஷ்ணன்


கட்டுரைப் படியெடுப்பு

வியாழன், 19 டிசம்பர், 2013

Posted by விகாரன் On 11:18 PM
    யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு நெய்தல் நிலங்களும் தமக்கென அமைந்த சிறப்பான சரித்திர இருப்பினையும்  பண்பாட்டு தொடர்ச்சியையும்  கொண்டவை. குறிப்பாக யாழின் கிழக்கு  கடல்புறம் உள்ள நெய்தல் கிராமங்களும் இன்றும் பண்பாட்டின் முக்கிய கூறாகவிளங்குகின்றன. அத்தகையதொரு கிராமமாகவே இருக்கிறது  மணற்காடு கிராமமும்.
  கடல்வளம்,சுனாமியின் வடு, தொல்லியல் என்று வெளி உலகினால் அறியப்பட்ட  மணற்காடு பண்பாட்டு இருப்பு உள்ளதொரு இடமாகவும் அடையாளம் பெறுகின்றது. மணலோடு அமைந்ததால் இக்கிராமம்
மணற்காடு என்று பெயர் பெற்றது.

நிலமும் கடலும் தொழிலும்

 மணற்காடு  கிராமம் கடல்வளம் மிக்க யாழ்ப்பாணத்தின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் அமைந் துள்ளது . ஆதாலல் கிராம மக்கள் கடலை அடிப்படையாக  கொண்ட  பொருளாதார மற்றும் சமூக  இருப்பிற்கே பழக்கப்பட்டு  இருகின்றார்கள்.மீன்பிடியும் அதனோடு சேர்ந்த வியாபாரமும் இங்கே பிரதான சீவனோபாயமாக காணப்படுகின்றது.
 ஆரம்பகாலங்களில் கட்டுமரங்களை  கொண்டு மீன்பிடியை மேற்கொண்ட  மக்கள்  இப்போது இயந்திரப்படகுகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பதோடு கரைவலை உள்ளிட்ட மீன்பிடித் தொழில் நுட்பங்களை பயன்படுத்து கின்றனர். நீண்டு நிலைத்த ;போரும்,2004இல் ஏற்றபட்ட சுனாமி  என இப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்தே வருகின்றனர்.
குடும்பங்களும் சமூகமும்
 மணற்காட்டின் எல்லைக்குள்  இன்று சுமார் 288குடும்பங்கள் இருக்கின்றன என்கிறார் ஊர்த்தலைவர் பேதுறுப்பிள்ளை ஜெபனாஸ். பெரும்பாலும் கருக்குடும்பமாகவே காணப் ;படுகின்றன. மிக நெருக்கமாக  வாழ்வதனால்  நகரம் போல் பக்கத்து வீடு தெரியாமல் இருக்கவில்லை இவர் கள்.இங்கிருக்கும் ஒவ் வொருவரும் எல்லொரையும் அறிந்துள்ளனர். ஒற்றுமையோ  பகைமையோ  ஏதோ  ஒரு  தொடர்பு இருக்கின்றது யாவர்க்கும். இதனால் மணற்காட்டின் சமூக தொடர்பாடல் ஆரோக்கிய மானதாகவே  இருக்கின்றது. கல்வியைப் பொறுத்தமட்டில் யாழ்ப்பண  மத்திய  மற்றும் நகரப்பகுதிகளைப் போல் வளர்ச்சியடைந்த கல்வி  மட்டம்  மணற்காட்டில் காணப்படவில்லை. ஆயினும் அடிப்படைக்கல்வி  இன்றி இங்கு  யாரும் இல்லை.
  'ஆரம்பக்கல்வியை கற்ற பிறகு 17, 18 வயது முதல் தங்கள்  தந்தையை  அல்லது குடும்ப உறுப்ப்பினர்களைப் பின்பற்றி கடல் தொழிலுக்கே சென்று  விடுகின்றனர். ஆனால் அது கூட  தவறு என்று  முழுதாக மறுத்து விட முடியாது. குடும்பங்களின் பொருளாதார சிக்கல் பிள்ளைகளை கல்வியை தொடர விடுவதில்லை'என்று  ஆதங்கத்துடன் சொல்கிறார் மணற்காடு றோ.க.பாடசாலை அதிபர் வாகீசன்.
ஆயினும் இன்று தாய்தந்தையருக்கு பிள்ளைகளின் கல்வி பற்றிய  விழிப்புணர்வுகளை  பாடசாலை  சமூகமும் அரசாங்கமும் செய்து வருவதானால் கடந்த 5 வருடத்தில் ஒரு மாணவன் பல்கலைகழகம் சென்றுள்ளார். இவ்வருடம் முதன்முதலாக மாணவன் ஒருவன் புலமைபரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்று இருப்பது நம்பிக்கை அளிப்பதாகவும் அதிபர்  மேலும் தெரிவித்தார்.


  சமயமும் நம்பிக்கைகளும்

  மணற்காடு கிராமம் முற்றுமுழுதாக ரேமன்கத்தோலிக்க சமயத்தை பின்பற்றுகின்ற மக்கள் வாழும் இடமாக காணப்படுகின்றது. புனித  பீட்டர் தேவாலயத்தை  கட்டி ஐரோப்பிய மிசனரிகள் உருவாக்கிய சமய நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு இக்கிராமத்தவர்களின்  இறையியல் கட்டமைக் கப்பட்டுள்ளது.
  இக்கிராமத்தில் அனைவரும் தெய்வ நம்பிக்கை மிகுதியாய் உள்ளவர்களாகவும் தேவாலய  பாதிரியாரை பெரிதும் மதிப்பதுடன் அவரின் ஆற்றுப்படுத்தல்களையும் போதனைகளையும் பின்பற்ற  முயல்கின்றனர். கிறிஸ்மஸ், பெரிய வெள்ளி போன்ற சமய  நிகழ்வுகள்  இங்கு வெகு சிறப்பாக நடை பெறுவதாக கிராமத்தவர்கள் கூறு கின்றனர்.அத்துடன் அவர்கள் இதர  சமயத்தவர்களுடன் நல்லதொரு புரிந் துணர்வையும் கொண் டுள்ளனர். கிராமத்தின் அருகில் இருக்கும் இந்துக் கோவிலான வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் உற்சவங்களில் தாம் உற்சாகமாய் கலந்து  கொள்வதாக கூறுகின்றனர் மணற்காடு மக்கள்.
அபிவிருத்தி மற்றும்    வெளித் தொடர்புகள்
 2004 ஆம்  வருடம் இந்துக்கடலை  உலுக்கிய சுனாமிப் பேரலையில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது மணற்காடு. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக  அரசும் இதர அரசசார்பற்ற நிறுவனங்களும் நீட்டிய  உதவிக்கரங்களை  பற்றிப் பிடித்தும் தங்களின் உழைப்பாலும் மெல்ல மெல்ல  வளர்ந்து வருகின்றது இக்கடலோர கிராமம் .நகர  பகுதியை  விட்டு  விலகி இருப்பதானாலும் சரியான போக்குவரத்து இன்மையாலும்  இதன் அபிவிருத்தி மந்தம் கொண்டு இருக்கிறது.
இன்று இக்கிராம மக்கள் வேண்டிநிற்பதெல்லாம் தேவையான போக்குவரத்து, கல்வி, மருத்தவ வசதிகளைத் தான்.ஒரு சிறு நிலப்பகுதியில் ஒரே  ஒரு நிரந்த  கட்டடமும் சிறிய நிலப்பகுதியும் கொண்டு  இருக்கும்  மணற்காட்டு பாடசாலை வளப்பற்றாக் குறையுடன் இயங்கி வருவதாக பாடசாலை அதிபர் தெரிவிக்கிறார். அரச கல்வி திணைக்களங்களிடம் இது பற்றி  கூறி இருப்பதாகவும் அவைகள் இதற்கு தகுந்த  நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி
உள்ளதாயும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

     முக்கியத்துவம்

அழகான கடற்கரை, சவுக்கு காடு, மண்வளம், என்பனவற்றுடன் வரலாற்று  சுவடுகள்; பலவும் புதைந்து கிடக்கும் தொல்லியல் இடக்கூறாகவும் மணற்பாடு பிரகடனம்  செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள  மணல்பிட்டி ஒன்றில் புதைந்துள்ள  பழைய  தேவா லயத்தை   இலங்கை  மரபுரி மைகள் காப்பகம் தொல்லியல் இருப்பென அறிவித்து உள்ளது. அங்கு ஆராய்ச்சிகளும் நடத்த படுகின்றன.
இவ்வாறான காரணங்களால் மணற்காடு  சிறந்த  கடல் வளம்  மிக்க சுற்றுலாத்தலமாகவும் மாற முனைகிறது  இது ஆரோக்கிய மானதொரு  வளர்ச்சி யாகும்.மணற்காட்டினை  போல்  நகர அமைப்புக்களுக்கு வெளியே காணப்படும் பண்பாடும் சிறப்பும் வாய்ந்த கிராமங்களே நம் நாட்டின் உண்மையானதும் அழகானதுமான முகங்களாகும்.

-யதார்தன் -(குணரட்ணம் பிரதீப்)

செவ்வாய், 10 டிசம்பர், 2013

Posted by விகாரன் On 6:14 AM

                     திரைப்படம் ஆற்றல் வாய்ந்த  ஒரு  கட்புலக்கலை  . 1930 இல்  வெளிவந்த   "மகாகவி  காளிதாஸ் "  எனும் படைப்புடன்  ஆரம்பமான  தமிழ்த் திரைப்படக்கலை யானது தமிழ்க்கலைப்பாரம்பரியத்தில்   பெரும் மாற்றங்களுடன் காத்திரமான  இடத்தினை   பிடித்துக் கொண்டுள்ளது. வெறும் பொழுது போக்கு ஊடகம்  என்பதனைத்தாண்டி  நம் சமுதாயத் தின்  போக்கில் மாற்றங்களை  சிருஸ்டிக்க தக்க  ஆற்றலினையும் இக்கலை பெற்றிருப்பதை யும் யாரும் மறுப்பதற்கில்லை.பல நூற்றுக்கணக்கான   தாயாரிப்பாளர்கள்  , இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் , ஒளிப்பதிவாளர்கள் ,இசையமைப்பளர்கள் , எழுத்தாளர்கள் ,கவிஞர்கள், நடிகர்கள் முதலானவர்களின்  உழைப்பினை உறிஞ்சி  திரைக்கலை விருட்சம்  இன்று விஸ்வரூபம் பெற்றுள்ளது .
                                      தமிழில்   தலைசிறந்த திரைப்படங்கள் வெளிவந்த  காலம் என்று ஒன்று  உண்டு . பீம்சிங்,ஸ்ரீதர் , பாலச்சந்தர் , பாரதிராஜா ,பாலுமகேந்திரா , மகேந்திரன் , பாசில்  என்று தலைசிறந்த  இயக்குனர்களின் படைப்புக்கள் வெளிவந்த  காலத்தில் தமிழ் திரைக்கலை   உச்சமான தொரு இடத்தினைப்பெற்று இருந்தது. காதல் கதை தொடங்கி மண்வாசனை ,பெண்ணியம் , என்று  அக்கால திரைப்படங்கள்  நேர்த்தியானதும் உறுதியானதுமான  கதை ,திரைக்கதை ,வசனம் ,இயக்கம் , ஒளிப்பதிவு ,இசையமைப்புடன்   போற்றுதற்குரிய இடத்தினைப்பெற்றன. 
                          ஆனால் இன்றைய நிலையில் தமிழ்த்  திரைக்கலை  தனக்குரிய தகுதியையையும் சிறப்பினையும்  தக்கவைத்துள்ளதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சமகாலத்தில் நவீன தொழிநுட்பங்கள்  திரைக்கலைக்குள்  பிரவேசித்து இருந்தாலும் கூட  பின்வரும்  விடயங்கள்  தமிழ்த்திரைக்கலையின்  தனித்துவத்தை யும்  சிறப்பையும் கேடுத்துக் கொண்டு இருக்கின்றன.

1. கதை அம்சமே இல்லாத  திரைக்கதை.
2. வெளிநாட்டார்  படைப்புக்களினை படியெடுத்தல்  [COPYING] .
3. காதைச்செவிடாக்கும் இசை / புரியாத வசனங்களுடன் பாடல்கள்.
4. தனிமனித துதி பாடுதலும் வன்முறையும்
5. பண்பாட்டினை விகாரமாக்கல்

                                          என்று பல பிறழ்வுகளுடன் வெறும் வியாபார நோக்கத்துடன்  இன்றைய இளைய சமுதாயத்தை குட்டிச்சுவராக்கும் வகையில் திரைப்படங்கள் வெளிவருகின்றன. இவற்றை  சற்றுவிரிவாக நோக்கிகுதல் பயனுடையதாகும்.   
சமீக காலமாக  வெளிவரும்  பெரும் பாலான தமிழ்த் திரைப்படங்களில் கதை அம்சத்தினை  தேடிப்பிடிப்பதே  பகீரத பிரயத்தன மாகிவிட்டது. பணம் இருந்தால்  யாரும் படம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு  கதை என்று  ஒன்று பெரிதாய் முக்கியம்  இல்லாத அளவிற்கு படம் எடுக்கின்றர். ஐந்து பாடல்அதில் இரண்டு குத்து பாடல்கள்  , நான்கு சண்டைக்காட்சி ,  இவைமட்டும் போதும் படம் ஒன்றிற்கு  எனும் நிலைதான் இன்று . அதிலும் குறிப்பாக தாங்கள்  தமிழ் சினிமாவின்  தலை சிறந்த இயக்குனர் கள் என்று மார்தட்டிக் கொண்டிருந்த  இயக்குனர்களே  கதை அம்சம் இல்லாத  படங்களினை  இயக்குவது தான் பெரும் வருத்தத்தை தருகிறது  
                                       இக்கால  தமிழ்திரைப் படங்கள் பற்றி  அதிகமாக விமர்சிக்கப்படும் ஒரு  விடயம்  வெளிநாட்டர்  திரைப்படங்களில் இருந்து கதை , காட்சிகளினை படி எடுக்கப்படு கின்றது [copying] என்பதாகும். அமெரிக்க , ஈரானிய, கிரேக்க  திரைப்படங்களில்  இருந்து  உரிமையுள்ளவர்களின் அனுமதி இல்லாமல் கதைகள் , காட்சி நுணுக்கங்களை  எடுத்து  சிற்சில மாற்றங்களுடன்  தமிழ் திரைப்படங்களில்  புகுத்துகின்றனர்  என்று , விடயம் அறிந்தவர்கள் ஆதாரங்களுடன் குற்றம்  சுமத்துகின்றனர்..ஆனால்  சர்வதேச திரைக்கலை ஓட்டத்தில் பரிச்சமில்லாத  திரைப்பட இரசிகர்கள்  படி எடுக்கப்பட்ட  இவ்வாறான திரைப்படங்களை வியந்து பாராட்டி  அவற்றை வியாபார அளவில் பெரும் வெற்றி பெறவும் செய்து விடுவது ஜீரணிக்க முடியாத  கவலை. இத்தகைய  இழிவான செயல் ஒட்டுமொத்த  தமிழ் திரைக்கலையை கொச்சைப் படுத்தி ,அதன் தரத்தினை  தாழ்தி விட்டுகிறது என்பதே உண்மை . 
                           இவறுடன்  திரைப்படங்களின் உயிரோட்டத்தை தீர்மானிக்கும்  திரை இசையும்  பல பிறழ்வுகளுடன் காணப்படுகிறது. குறிப்பாக மேலைத்தேச இசையை தமிழில்  கொண்டு வருகிறோம் என்ற பெயரில்  காதைசெவிடாக்கும் இசை அமைப்பாளர்களும் தமிழ் சினிமாவில்  காணப்படுகின்றனர். இசைக்கலவை என்ற பெயரின் பழம் பெரும்  திரை இசைப்பாடல்களினை சிதைத்து விடுவதும் , தமிழில் அருமையான கவிஞர்கள் இருந்தும் புரியாத வரிகளுடன் முகாரி ராகங்களில்  நாக்கு முக்கா பாடல்கள்  திரை இசையையும் கொச்சைப்படுத்தி விடுவதும்  சமகாலத்தில்  இயல்பாகி விட்டதொரு கொடுமை. அத்துடன் புகழ்மிகு திரை இசை அமைப்பாளர்களின் பின்னணி  இசை  பாலஸ்தீனம் , ஈரான் முதலிய நாட்டவர்களின்   இசை துணுக்குகளினை படி எடுப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. எனினும்   சமகாலதில்  இளையராஜா , ஏ.ஆர்.ரகுமான் , இமான் , ஜிப்ரான்   முதலிய சில  தலைசிறந்த இசையமைப்பாளர்கள்  தமிழிசை யின் தனித்துவம் கெடாமல் பாதுகாப்பது ஓரளவு நின்மதி அளிக்கிறது.
                                                             
சமகால திரைப்படங்களில் முன்வைக்கப்படும் மிகப்பெரிய வேடிக்கைத்தனம்  கதாநாயகன் எனும் தனிமனிதனின் துதி பாடுதல் ஆகும் .நம்முடைய வரலாற்றிலும் ,காவியங்களிலும் சித்தரிக்கப்படும் அசகாய சூரன் களாயும்  தன்னிகரில்லா தலைவன்களாகவும்  தமிழ் திரைப்படங்களில்  தமிழ் கதாநாயகர்கள்  நம்ப முடியாத அளவிற்கு சித்திரிக்கப்படுகின்றனர் . இத்தகைய  கதாநாயக விம்பத்தால் பாதிக்கப்பட்ட  நம் இளைஞர்கள்  கையில் ஆயுதங்கள்  , போதை,  என்று இரத்த வெறியுடன் தாதாக்களாய்  அலையும் அளவிற்கு போய்விட்டனர். அத்துடன் தங்கள் அபிமான கதாநாயக , கதாநாயகியின் படங்கள் வெளியாகும்  போது  அவர்களின்  உருவங்களுக்கு பாலாபிசேகம் செய்தல், காவடி எடுத்தல்  ஏன்  அவர்களுக்கு  கோயில் கட்டும் அளவிற்கு கூட  கோமாளித்தனங்கள் செய்வது  உணர்ச்சிமிகு கோபத்தை உண்டு பண்ணுகின்றது.
                         இன்றைய தமிழ்த்திரைப்படங்கள் நம் பண்பாடினை  முழுதாய் சிதைத்து விடுகின்றன. குறிப்பாக பெண்களை இழிவான நிலையில் சித்திரித்தல், குடும்ப உறவுகள்,காதல் , நட்பு ,சமய நெறி முறைகள்  என்பவற்றைக் கொச்சைப்படுத் தல்  முதலான   பண்பாட்டுக் கொலைகளினை  தாராளமாகச் செய்கின்றன  நம்  பல தமிழ் த் திரைப்படங்கள். 
                       அத்துடன்  சமீபத்திய  திரைப்படங்களில்  இரட்டை அர்த்தமும் ஆபாசங்களும்  மிக்க நாகரீகமில்லாத  வசனங்களும் ,  நகைச்சுவைக் காட்சிகளும்  அதிகமாக இடம் பெறுகின்றமை  பலரையும்  முகம் சுழிக்கவைக்கின்றது. 
.ஆயினும் தமிழில்  ஓரு சில  தலை சிறந்த இயக்குனர்கள்  திரைக்கலையை  உன்னத நிலைக்கு எடுத்துச்  செல்ல  பெருமுயற்சி  செய்கின்றமை  ஆறுதல்  தருகின்றது.
இயக்குனர்களான    பாலா, பாலாஜி சக்திவேல் , சேரன் ,வசந்தபாலன் ,வெற்றிமாறன், பாண்டிராஜ் , மிஷ்கின் ,பிரபு சாலமன் , திருமுருகன்  , சற்குணம்  , ராம் , ராதாமோகன்  முதலான படைப்பாளிகளின்திரைப்படங்கள்  சமூகதிற்கு பயன் தரக்க்கூடிய வகையில் அமைவதனைக்காணலாம்.  யதார்த மான கதையோட்டத்திற்கு  முதன்மை கொடுத்து  தமிழ்ப் பண்பாட்டினை அதன் உண்மைத்தன்மை மாறாமல் காட்சி படுத்துவதில் இவ்  இளம் இயக்குனர்கள்  காட்டுகின்ற ஆர்வம்  மற்றும் படைப்பாற்றல்  எதிர்காலத்தில்  தமிழ்த்திரைக்கலை உயிர்ப்புடன்  இயங்கும் என நம்பிக்கை  தருகிறது  அத்தடன்  திரைகலை யினை முறையாய் பயின்று  குறும் படங்கள் மூலம்  புகழ்பெற்று  பெரிய திரைக்குவரும்  பாலாஜி {காதலில் சொதப்புவது எப்படி } , சரவணன்  {எங்கேயும் எப்போதும் } , கார்த்திக் சுப்ராஜ் { பீட்சா },லக்‌ஷ்மி ராமகிருஸ்ணன் {ஆரோகணம் }  முதலான அறிமுக இயக்குனர்களும் தம்   நல்ல படைப்புக்களால் நம்பிக்கை தருகின்றனர் . அத்தோடு   சாருநிவேதிதா , அ. ராமசாமி முதலிய தரமான  விமர்சகர்களின்  விமர்சனங்களும் திரைக்கலையை  உன்னத நிலைக்கு இட்டுச்செல்ல  உதவுகின்றமை  பாராட்டத்தக்கது.
        
கன்னடம் , மலையாளம் முதலிய அயல்  மொழிகளில் கலை ,இலக்கிய உண்மைகள், யதார்தம் என்பன சுவறிய  நல்ல படைப்புக்கள் வெளிவருகின்றன.அனால்  தமிழில் அத்தகைய படைப்புக்கள்  ஒப்பீட்டு அளவில்  சொற்பமாகவே வெளி வருகின் றமை   வருத்தத்திற்கு உரியது
தமிழில்  தரம் மிக்க  இலக்கியங்கள் , நாவல்கள் ,சிறுகதைகள் , உள்ளன  இவற்றில் இருந்து  கதைக்கருக்களை எடுத்து  திரைப்பட மாக்கும்  முயற்சிகள்  செய்யப்பட்டால்  தமிழில் குறைபாடுகள் குறைவான படைப்புக்களை   எதிர்பார்க்க  இயலும். இது  இன்றைய பொழுதுகளில்  திரைக்கலையில் வேண்டப்படும் ஒன்றாகும். அத்துடன் வெளிநாட்டார் படைப்புக்களை நம் மொழியில்  கொண்டுவர விரும்பினால்  அதற்கான உரிமையை  உரியமுறையில் பெற்று  அதனைச்செய்வதே நாகரிகமான செயலாகும். அத்துடன் திரைப்பட இரசிகர்கள்  இத்தகைய பிறழ்வான திரைப்படங்களை புறக்கணித்து  நல்ல படைப்புகளுக்கு வரவேற்பு கொடுத்தால்  படைப்பளிகளும்  தங்கள்  பொறுப்பு உணர்ந்து  தங்கள் திரைப்படங்களை  வெளிக்கொண்டு  வருவர்  என்பது ம் அறிவுறுத்த அவசியமானது.
                                       
                   எழுத்து ; கு .பிரதீப் [ யதார்தன் ]  
                         யாழ்.பல்கலைக்கழகம் [M R T C]

திங்கள், 9 டிசம்பர், 2013

Posted by விகாரன் On 9:53 PM



(சர்வதேச  மனித உரிமைகள்  தினத்தை முன் நிறுத்தி)


பிறப்பொக்கும் எல்லா உயிக்கும் என்றார் வள்ளுவர். மனித உரிமைகளும் அத்தகையதே மனிதன் ,இற்கையாகவே  உரிமையுடன் பிறக்கின்றான்
மனித உரிமை என்பது ஒவ்வொருவரும் மனிதராக இருப்பதன் காரணத்தினால்உரிமைகளைப் பெறவேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகும்ஒன்றாகும்.மார்கழி 10.சர்வதேச மனித  உரிமைகள் தினமாகும்
1950 ஆம் ஆண்டில் ,இருந்து சர்வதேச  மனித  உரிமைகள் தினம் ஐ.நா சபையின் பிரேரணையின் அடிப்படையில் அனுட்டிக்கப்படுகிறது. ஓவ்வொரு வருடமும் ஒவொரு தொனிப்பொருளின் கீழ் ,இத்தினம்  நினைவுகூரப்படுகின்றது, ,இவ்வருடம்  'உங்கள் உரிமைகளுக்கான ; பணியில் 20 வருடங்கள்' '20 லுநயசள றுழசமiபெ கழச லுழரச சுiபாவள  என்ற  தொனிப்பொருளில் மனித உரிமைகள் தினம் அனுட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1993 ஆம் வருடம் வியன்னா நகரில் நடைபெற்ற மனித
உரிமைகளுககான் சர்வதேச மகாநாட்டில் மனித  உரிமைகளை உறுதிப்படுத்துவதன் அவசியம் தொடர்பில் சர்வதேச  நாடுகள் எடுத்துக் கொண்ட ஆணைக்கு ,இவ்வருடத்துடன் 20 வயதாகின்றது.,இன்றுவரை அவ்வாணை ஆற்றிய செயற்பாடுகளை  நினைவுகூரலும் விழ்ப்புணர்வூட்டலும இவ்வருடத்தின்தொனிப்பொருளின் நோக்கமாக மேற்தெரிகின்றது.,அதன் அடிப்படையில் ,இ ன்றைய  பொழுதில் மனித உரிமைகள்  தொடர்பில் சர்வதேசம் அடைந்த பெறுபேறுகளை ,இரைமீட்டல் தகுந்த செயலாகும்.
மனித உரிமைகள் பற்றிய சமகால நிலையினைதுலக்க  அதன் வரலாற்று  ஓட்டத்தினையும் நோக்குதல் பொருத்த மான  செயலாக  அமையும்.
;
சுருக்கமாய் ஒரு வரலாறு


மனித உரிமையின் வரலாறு பல நூறு ஆண்டுகளைக் கொண்டது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் இது விரிவு படுத்தப்பட்டுள்ளது. கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட 'நோக்கப் பிரகடனமும்,' கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியாவின் அசோகப் பேரரசனால் வெளியிட்ட 'அசோகனின் ஆணையும்' விதந்து கூறக்கூடியவை. ஆங்கிலச் சட்ட வரலாற்றில் 1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்' (ஆயபயெ ஊயசவய டுiடிநசவயவரஅ) முக்கியத்துவம் பெறுகின்றது.

மறுமலர்ச்சிக் காலத்தில் 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ஜெர்மனியில் வெளியிடப்பட்ட 'கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்' (வுறநடஎந யுசவiஉடநள ழக வாந டீடயஉம குழசநளவ) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் மனித உரிமை தொடர்பான முதல் பதிவு எனக் கூறப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 'பிரித்தானிய உரிமைகள் சட்டமூலமும்', 1789 ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிரான்சின் தேசியசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'மனிதர்களுக்கும், குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கையும்'. 1776 ம்ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தை அடுத்து முன்வைக்கப்பட்ட 'ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கையும்', 1789ம்ஆண்டு பிரான்ஸியப் புரட்சியை அடுத்து 'மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள்' அறிக்கையும். முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் அனைத்துல செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் 'லீபர் நெறிகள்' 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.

முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வொர்சஸ்; ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் 'சர்வதேச சங்கம்' உருவானது. இச்சங்கம், மீண்டும் ஒரு உலக மகா யுத்தம் நடைபெறக்கூடாது, என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இந்த அடிப்படையில் ஆயுதக் களைவு, கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல், நாடுகளிடையேயான முரண்பாடுகளை கலந்துபேசுதல், இராஜதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இம்முயற்சிகள் பூரண வெற்றியினைத் தரவில்லை. ஆனாலும், மனித உரிமைகளுடன் இத்திட்டங்கள் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன. இவை இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்வாங்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம் 

1948 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 'சர்வதேச மனித உரிமை சாசனம்' 30 உறுப்புரைகளைக் கொண்டது. உலகளாவிய ரீதியில் நாடுகளின் அரசியல் திட்டங்கள் மனித உரிமைகள் பற்றிய உறுப்புரைகளை ஐ.நா.வின் மனித உரிமைகள் சாசனத்துக்கு இசைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வுறுப்புரைகள் தற்போது விரிவான செயற்பாடுகளை மையமாகக் கொண்டு காலத்துக்குக் காலம் விரிவுபடுத்தப்பட்டதாக பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளன. உதாரணமாக 1993ஆம் ஆண்டு வியன்னர் நகரில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான உலக மாநாட்டுப் பிரகடனத்தில் 'மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் எனக் கூறப்படுகின்றது.

மனித உரிமை பிரகடனம் முப்பது உறுப்புரைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் முதலாவது உறுப்புரை சுதந்திரமாக பிறக்கும் மனிதர்கள் யாவரும் சமமானவர்களெனவும் மதிப்பையும் நியாயத்தையும் கொண்டவர்களெனவும் கூறுகின்றது. இரண்டாவது உறுப்புரை இன, மத, மொழி, பால், நிறம், அரசியல் வேறுபாடுமின்றி, சமூக வேறுபாடுமின்றி இப்பிரகடனம் சகலருக்கும் உரித்தானதாக கூறப்படுகின்றது. உறுப்புரை மூன்றிலிருந்து இருபத்தொன்று (3 - 21) வரை உள்ளவற்றில் மனித இனத்தின் சிவில், அரசியல் உரிமைகள் பற்றி கூறப்படுகின்றது. அதாவது பாதுகாப்பு, அடிமைத்தனம், சித்திரவதை, சட்டத்தின் முன்னால் சமத்துவம், வேறுபாடு, அடிப்படை உரிமைகள், கைது, நீதி, நிரபராதி, அரசியல் தஞ்சமும் துன்புறுத்தல், திருமணம், சொத்துரிமை, சிந்தனை உரிமை, பேச்சு சுதந்திரம், தகவல் பரிமாற்ற உரிமை, ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவற்றை பற்றி அவை கூறுகின்றன. மற்றைய சரத்துகளான இருபத்தியிரண்டிலிருந்து இருபத்தியேழு வரையானவை (22 - 27) மனித இனத்தின் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை உள்ளடக்கியுள்ளன. அதாவது வேலை, உடை, உணவு, தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு, கல்வி போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் இறுதி சரத்துக்களான இருபத்து எட்டிலிருந்து முப்பதுவரை இச் சாதனத்தின் நடைமுறை, பொறுப்பு, உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக் காணப்படுகிறது. இந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடமைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் உரியது.

,இன்றைய நிலையில் மனித உரிமைகள்

,இறுதியாக மனித உரிமைகள்  தொடர்பான மிகப்பெரிய சர்வதேச மகாநாடு 1993இல
வியட்னாமில்; நiபெற்று ,இரண்டு தாசப்தங்கள் கடந்து விட்டது ,இந்த 20 வருடங்களில் ஐ.நா வும் அதனுடைய மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சர்வதேச அளவில் மனித உரிமைகளை  நிலைநிறுத்துவதில் பெற்ற வெற்றி தொல்விகள் சமகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும் நல்ல வரலாற்று படிப்பினையை வழங்கி உள்ளன. மேலைத்தேச  நாடுகளில் அமெரிக்கா , சுவிஸ்லாந்து ,கனடா, பிரிட்டன் போன்ற ஆரோக்கிய சனநாயகம் நிலவும் நாடுகளில் தேசிய ரீதியாக மனித உரிமைகள் மிக உறுதியாகவும் யாப்புறுத்துவம் மற்றும் நடைமுறைச்சாத்தியமான வகையிலும் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.ஆனால் மத்திய கிழக்கு மற்றும் கீழைத்தேச நாடுகளில் மனித உரிமைகள் மிக மோசமான நிலையை  நோக்கி போய்கொண்டு ,இருப்பதாக கூறுகின்றது மனித உரிமைகளுகான ஆணைக்குழுவின் ஆண்டறிக்கைகள். தனிமனித  குரோதம்,சாதி ,இனத்துவம்,மதம் ,உள்நாட்டு போர், நாடுகளுக்கு ,இடைப்பட்ட  போர் என  பல காரணிகள் ,இத்தேசங்களின் மனித உரிமைகளுக்கான ,இருப்பினை செல்லரித்து போகச்செய்கின்றன. என்கின்றனர் அறிஞர்கள்.

இலங்கையில் மனித உரிமைகளின் நிலை

இலங்கை இப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இலங்கை ஐ.நா.வில் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆங்கிலேய காலனித்துவத்திடமிருந்து இலங்கை அதே ஆண்டில் தான் சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது. நாம் ஏற்கெனவே பார்த்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சரத்தில் எவற்றை இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கு சாதகமாக இலங்கை ஆட்சியாளர் பாவித்துள்ளார்கள. உண்மையை கூறுவதானால் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை சரத்துக்களையும் இலங்கை மீறியுள்ளதற்கான ஆதாரங்கள் பலதை உதாரணப்படுத்தலாம்.

மனித உரிமைகள் என்பது சமாதானத்துக்கும், பாதுகாப்புக்கும், பொருளாதார அபிவிருத்திக்கும், சமூக சமத்துவத்துக்கும், பூரணத்துவம் வாய்ந்த ஊடகமாக உள்ளது. ஐ. நா. தாபனம இந்த மனித உரிமைகளை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும், பாதுகாக்கவும் ஒரு மையமாகச் செயல்படுகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற வேளையிலே குடியுரிமை, வாக்குரிமை பற்றி எடுத்துக் கூறும் இருபத்தியோராம் உறுப்புரையை மீறியது. அதாவது மலையகத் தோட்டத் தொழிளாலர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு சிங்களச்சட்டம 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்கள் என மனித உரிமைகள் மீறப்பட்டன்

நூறு ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை 1964 ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் நாடு கடத்தியதன் மூலமும். தமிழ் மாணவர்கள் சம கல்வி மறுக்கப்பட்டு தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் . தொடர்ச்சியான அவசரகால நிலையுடன் கூடிய பயங்கரவாதச் சட்டம் மூலமும் பல  இடங்களில் சரத்துகளை மீறிய மனித உரிமை மீறல்கள் பதிவாகி உள்ளன. இவ்வாறு அடிக்கிக் கொண்டு போகலாம். இந்நிலை யுத்தகாலத்தில் மிகைத்திருந்தது.
மனித உரிமைகள் பாதுகாப்பது தொடர்பில் சர்வதேசத்தினால் சமகாலத்தில் கடுமையாக கண்டித்து கூறப்படும் நாடுகளுள் ,இலங்கையும் ஒன்றாகும்.,இலங்கை சனநாயக சோசலிச குடியரசின்  அரசியலமைபில் 10 ஆம் சரத்து முதல் அடிப்படை மனித உரிமைகள் வலியுறுத்தப்பட்டாலும் 1978 ஆம் ஆண்டு 2 ஆம்குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது தொடக்கம் ,இன்று வரை ,இலங்கையில் ஏராளம் மனித உரிமைமீறல் கள் கொடூரங்கள் புடைசூழ நடைபெற்றும் ,நடைபெற்றுக் கொண்டும் ,இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட்ட  சர்வதேச, மற்றும் தேசிய அமைப்புக்கள் ஆதாரம் முன்வைக்கின்றன.30 வருடகால  போரில் மூழ்கி ,இருந்த ,இலங்கையில் சாதாரண ஆயத குழுக்கள்  முதல், போராட்ட  காரர்கள், மற்றும் அரசு வரை மனித உரிமை மீறல்களை  தாரளமாக மேற்கொண்டதாகவும் பன்னாட்டு அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன.

இலக்கை அடைதல்

,இத்தகைய  நிலையை தொகுத்து  நோக்கும் போது மனித  உரிமைகள்  பற்றிய விழிப்புணர்வு ,இன்னும்   பல  தேசங்களில் ஏற்படுத்தப்பட வேண்டியது அத்தியாவசியமாகின்றது இலங்கை போன்ற  நாடுகளில் இனப்படுகொலை,சிற்பான்மையினர் ஓரம் கட்டப்படல்,கல்வி வேலை வாய்ப்புகளில் ஏற்படுத்தப்படும் சமனற்ற நிலை ,சட்டவ்ரம்பற்ற கைதுகள்,படுகொலைகள், கொள்ளைகள்  முதலான மனித உரிமைமீறல்கள்  கட்டுபடுத்த  படல்  வேண்டும்.

அடிப்படை உரிமைகள் ,குடியியல்  உரிமைகள் மற்றும் பொருளாதார சமூக உரிமைகள் என சகல மனித  உரிமைகளும் ,இதனுள்  அடங்கும்.அதனுள்  பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் பெண்ணடிமைத்தன சிதைப்புக்கள்,சிறுவர்  துஸ்பிரயோகங்கள்முதலானவையும் குறிப்பிட்டு  சொல்ல  வேண்டிய மனித உரிமை மீறல்கள் ஆகும்

'மனிதன் பிறப்பது சுதந்திரமாகத்தான் ஆனால் பல்வேறு நிலைகளில் பல்வேறு தடைகளால் கட்ட  படுகின்றான் ' என்கின்றார் அறிஞர்  மொண்டஸ்கியூ அக்கருத்து முற்றிலும் உண்மையாகும்.அத்தகைய தடைகளை களைவது அத்தியாவசியமாகும்..

;.உளரீதியான தனிமனித  மாற்றமே விழிப்புணர்வுள்ள சனத்திரளை உருவாக்கும் ஆகவே இன்றைய மனித உரிமைகள்  தினத்தில் உரிமைகள்  பற்றி ஒவோருவரும் சிந்தித்தல்  வேண்டும். ,இந்த உலகில் நம்முடன் பிறந்த பல  கோடி பேரும் நம்மைப்போல் உரிமை ,சுதந்திரம் என்பவற்றை சமனாக  பெற்றவர்கள் என்பதை ஒவ்வொரு வரும் மனம் கொண்டால் ஆரோக்கியமானதொரு மனித சமுதாயத்தை பிறப்பிக்க இயலும்.

-யதார்தன் -(குணரட்ணம் பிரதீப்)