(சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன் நிறுத்தி)
பிறப்பொக்கும் எல்லா உயிக்கும் என்றார் வள்ளுவர். மனித உரிமைகளும் அத்தகையதே மனிதன் ,இற்கையாகவே உரிமையுடன் பிறக்கின்றான்
மனித உரிமை என்பது ஒவ்வொருவரும் மனிதராக இருப்பதன் காரணத்தினால்உரிமைகளைப் பெறவேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகும்ஒன்றாகும்.மார்கழி 10.சர்வதேச மனித உரிமைகள் தினமாகும்
1950 ஆம் ஆண்டில் ,இருந்து சர்வதேச மனித உரிமைகள் தினம் ஐ.நா சபையின் பிரேரணையின் அடிப்படையில் அனுட்டிக்கப்படுகிறது. ஓவ்வொரு வருடமும் ஒவொரு தொனிப்பொருளின் கீழ் ,இத்தினம் நினைவுகூரப்படுகின்றது, ,இவ்வருடம் 'உங்கள் உரிமைகளுக்கான ; பணியில் 20 வருடங்கள்' '20 லுநயசள றுழசமiபெ கழச லுழரச சுiபாவள என்ற தொனிப்பொருளில் மனித உரிமைகள் தினம் அனுட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1993 ஆம் வருடம் வியன்னா நகரில் நடைபெற்ற மனித
உரிமைகளுககான் சர்வதேச மகாநாட்டில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதன் அவசியம் தொடர்பில் சர்வதேச நாடுகள் எடுத்துக் கொண்ட ஆணைக்கு ,இவ்வருடத்துடன் 20 வயதாகின்றது.,இன்றுவரை அவ்வாணை ஆற்றிய செயற்பாடுகளை நினைவுகூரலும் விழ்ப்புணர்வூட்டலும இவ்வருடத்தின்தொனிப்பொருளின் நோக்கமாக மேற்தெரிகின்றது.,அதன் அடிப்படையில் ,இ ன்றைய பொழுதில் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேசம் அடைந்த பெறுபேறுகளை ,இரைமீட்டல் தகுந்த செயலாகும்.
மனித உரிமைகள் பற்றிய சமகால நிலையினைதுலக்க அதன் வரலாற்று ஓட்டத்தினையும் நோக்குதல் பொருத்த மான செயலாக அமையும்.
;
சுருக்கமாய் ஒரு வரலாறு
மனித உரிமையின் வரலாறு பல நூறு ஆண்டுகளைக் கொண்டது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் இது விரிவு படுத்தப்பட்டுள்ளது. கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட 'நோக்கப் பிரகடனமும்,' கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியாவின் அசோகப் பேரரசனால் வெளியிட்ட 'அசோகனின் ஆணையும்' விதந்து கூறக்கூடியவை. ஆங்கிலச் சட்ட வரலாற்றில் 1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்' (ஆயபயெ ஊயசவய டுiடிநசவயவரஅ) முக்கியத்துவம் பெறுகின்றது.
மறுமலர்ச்சிக் காலத்தில் 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ஜெர்மனியில் வெளியிடப்பட்ட 'கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்' (வுறநடஎந யுசவiஉடநள ழக வாந டீடயஉம குழசநளவ) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் மனித உரிமை தொடர்பான முதல் பதிவு எனக் கூறப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 'பிரித்தானிய உரிமைகள் சட்டமூலமும்', 1789 ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிரான்சின் தேசியசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'மனிதர்களுக்கும், குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கையும்'. 1776 ம்ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தை அடுத்து முன்வைக்கப்பட்ட 'ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கையும்', 1789ம்ஆண்டு பிரான்ஸியப் புரட்சியை அடுத்து 'மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள்' அறிக்கையும். முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் அனைத்துல செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் 'லீபர் நெறிகள்' 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.
முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வொர்சஸ்; ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் 'சர்வதேச சங்கம்' உருவானது. இச்சங்கம், மீண்டும் ஒரு உலக மகா யுத்தம் நடைபெறக்கூடாது, என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இந்த அடிப்படையில் ஆயுதக் களைவு, கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல், நாடுகளிடையேயான முரண்பாடுகளை கலந்துபேசுதல், இராஜதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இம்முயற்சிகள் பூரண வெற்றியினைத் தரவில்லை. ஆனாலும், மனித உரிமைகளுடன் இத்திட்டங்கள் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன. இவை இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்வாங்கப்பட்டுள்ளன.
மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்
1948 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 'சர்வதேச மனித உரிமை சாசனம்' 30 உறுப்புரைகளைக் கொண்டது. உலகளாவிய ரீதியில் நாடுகளின் அரசியல் திட்டங்கள் மனித உரிமைகள் பற்றிய உறுப்புரைகளை ஐ.நா.வின் மனித உரிமைகள் சாசனத்துக்கு இசைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வுறுப்புரைகள் தற்போது விரிவான செயற்பாடுகளை மையமாகக் கொண்டு காலத்துக்குக் காலம் விரிவுபடுத்தப்பட்டதாக பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளன. உதாரணமாக 1993ஆம் ஆண்டு வியன்னர் நகரில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான உலக மாநாட்டுப் பிரகடனத்தில் 'மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் எனக் கூறப்படுகின்றது.
மனித உரிமை பிரகடனம் முப்பது உறுப்புரைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் முதலாவது உறுப்புரை சுதந்திரமாக பிறக்கும் மனிதர்கள் யாவரும் சமமானவர்களெனவும் மதிப்பையும் நியாயத்தையும் கொண்டவர்களெனவும் கூறுகின்றது. இரண்டாவது உறுப்புரை இன, மத, மொழி, பால், நிறம், அரசியல் வேறுபாடுமின்றி, சமூக வேறுபாடுமின்றி இப்பிரகடனம் சகலருக்கும் உரித்தானதாக கூறப்படுகின்றது. உறுப்புரை மூன்றிலிருந்து இருபத்தொன்று (3 - 21) வரை உள்ளவற்றில் மனித இனத்தின் சிவில், அரசியல் உரிமைகள் பற்றி கூறப்படுகின்றது. அதாவது பாதுகாப்பு, அடிமைத்தனம், சித்திரவதை, சட்டத்தின் முன்னால் சமத்துவம், வேறுபாடு, அடிப்படை உரிமைகள், கைது, நீதி, நிரபராதி, அரசியல் தஞ்சமும் துன்புறுத்தல், திருமணம், சொத்துரிமை, சிந்தனை உரிமை, பேச்சு சுதந்திரம், தகவல் பரிமாற்ற உரிமை, ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவற்றை பற்றி அவை கூறுகின்றன. மற்றைய சரத்துகளான இருபத்தியிரண்டிலிருந்து இருபத்தியேழு வரையானவை (22 - 27) மனித இனத்தின் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை உள்ளடக்கியுள்ளன. அதாவது வேலை, உடை, உணவு, தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு, கல்வி போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் இறுதி சரத்துக்களான இருபத்து எட்டிலிருந்து முப்பதுவரை இச் சாதனத்தின் நடைமுறை, பொறுப்பு, உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக் காணப்படுகிறது. இந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடமைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் உரியது.
,இன்றைய நிலையில் மனித உரிமைகள்
,இறுதியாக மனித உரிமைகள் தொடர்பான மிகப்பெரிய சர்வதேச மகாநாடு 1993இல
வியட்னாமில்; நiபெற்று ,இரண்டு தாசப்தங்கள் கடந்து விட்டது ,இந்த 20 வருடங்களில் ஐ.நா வும் அதனுடைய மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சர்வதேச அளவில் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதில் பெற்ற வெற்றி தொல்விகள் சமகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும் நல்ல வரலாற்று படிப்பினையை வழங்கி உள்ளன. மேலைத்தேச நாடுகளில் அமெரிக்கா , சுவிஸ்லாந்து ,கனடா, பிரிட்டன் போன்ற ஆரோக்கிய சனநாயகம் நிலவும் நாடுகளில் தேசிய ரீதியாக மனித உரிமைகள் மிக உறுதியாகவும் யாப்புறுத்துவம் மற்றும் நடைமுறைச்சாத்தியமான வகையிலும் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.ஆனால் மத்திய கிழக்கு மற்றும் கீழைத்தேச நாடுகளில் மனித உரிமைகள் மிக மோசமான நிலையை நோக்கி போய்கொண்டு ,இருப்பதாக கூறுகின்றது மனித உரிமைகளுகான ஆணைக்குழுவின் ஆண்டறிக்கைகள். தனிமனித குரோதம்,சாதி ,இனத்துவம்,மதம் ,உள்நாட்டு போர், நாடுகளுக்கு ,இடைப்பட்ட போர் என பல காரணிகள் ,இத்தேசங்களின் மனித உரிமைகளுக்கான ,இருப்பினை செல்லரித்து போகச்செய்கின்றன. என்கின்றனர் அறிஞர்கள்.
இலங்கையில் மனித உரிமைகளின் நிலை
இலங்கை இப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இலங்கை ஐ.நா.வில் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆங்கிலேய காலனித்துவத்திடமிருந்து இலங்கை அதே ஆண்டில் தான் சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது. நாம் ஏற்கெனவே பார்த்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சரத்தில் எவற்றை இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கு சாதகமாக இலங்கை ஆட்சியாளர் பாவித்துள்ளார்கள. உண்மையை கூறுவதானால் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை சரத்துக்களையும் இலங்கை மீறியுள்ளதற்கான ஆதாரங்கள் பலதை உதாரணப்படுத்தலாம்.
மனித உரிமைகள் என்பது சமாதானத்துக்கும், பாதுகாப்புக்கும், பொருளாதார அபிவிருத்திக்கும், சமூக சமத்துவத்துக்கும், பூரணத்துவம் வாய்ந்த ஊடகமாக உள்ளது. ஐ. நா. தாபனம இந்த மனித உரிமைகளை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும், பாதுகாக்கவும் ஒரு மையமாகச் செயல்படுகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற வேளையிலே குடியுரிமை, வாக்குரிமை பற்றி எடுத்துக் கூறும் இருபத்தியோராம் உறுப்புரையை மீறியது. அதாவது மலையகத் தோட்டத் தொழிளாலர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு சிங்களச்சட்டம 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்கள் என மனித உரிமைகள் மீறப்பட்டன்
நூறு ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை 1964 ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் நாடு கடத்தியதன் மூலமும். தமிழ் மாணவர்கள் சம கல்வி மறுக்கப்பட்டு தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் . தொடர்ச்சியான அவசரகால நிலையுடன் கூடிய பயங்கரவாதச் சட்டம் மூலமும் பல இடங்களில் சரத்துகளை மீறிய மனித உரிமை மீறல்கள் பதிவாகி உள்ளன. இவ்வாறு அடிக்கிக் கொண்டு போகலாம். இந்நிலை யுத்தகாலத்தில் மிகைத்திருந்தது.
மனித உரிமைகள் பாதுகாப்பது தொடர்பில் சர்வதேசத்தினால் சமகாலத்தில் கடுமையாக கண்டித்து கூறப்படும் நாடுகளுள் ,இலங்கையும் ஒன்றாகும்.,இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைபில் 10 ஆம் சரத்து முதல் அடிப்படை மனித உரிமைகள் வலியுறுத்தப்பட்டாலும் 1978 ஆம் ஆண்டு 2 ஆம்குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது தொடக்கம் ,இன்று வரை ,இலங்கையில் ஏராளம் மனித உரிமைமீறல் கள் கொடூரங்கள் புடைசூழ நடைபெற்றும் ,நடைபெற்றுக் கொண்டும் ,இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட்ட சர்வதேச, மற்றும் தேசிய அமைப்புக்கள் ஆதாரம் முன்வைக்கின்றன.30 வருடகால போரில் மூழ்கி ,இருந்த ,இலங்கையில் சாதாரண ஆயத குழுக்கள் முதல், போராட்ட காரர்கள், மற்றும் அரசு வரை மனித உரிமை மீறல்களை தாரளமாக மேற்கொண்டதாகவும் பன்னாட்டு அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன.
இலக்கை அடைதல்
,இத்தகைய நிலையை தொகுத்து நோக்கும் போது மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ,இன்னும் பல தேசங்களில் ஏற்படுத்தப்பட வேண்டியது அத்தியாவசியமாகின்றது இலங்கை போன்ற நாடுகளில் இனப்படுகொலை,சிற்பான்மையினர் ஓரம் கட்டப்படல்,கல்வி வேலை வாய்ப்புகளில் ஏற்படுத்தப்படும் சமனற்ற நிலை ,சட்டவ்ரம்பற்ற கைதுகள்,படுகொலைகள், கொள்ளைகள் முதலான மனித உரிமைமீறல்கள் கட்டுபடுத்த படல் வேண்டும்.
அடிப்படை உரிமைகள் ,குடியியல் உரிமைகள் மற்றும் பொருளாதார சமூக உரிமைகள் என சகல மனித உரிமைகளும் ,இதனுள் அடங்கும்.அதனுள் பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் பெண்ணடிமைத்தன சிதைப்புக்கள்,சிறுவர் துஸ்பிரயோகங்கள்முதலானவையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மனித உரிமை மீறல்கள் ஆகும்
'மனிதன் பிறப்பது சுதந்திரமாகத்தான் ஆனால் பல்வேறு நிலைகளில் பல்வேறு தடைகளால் கட்ட படுகின்றான் ' என்கின்றார் அறிஞர் மொண்டஸ்கியூ அக்கருத்து முற்றிலும் உண்மையாகும்.அத்தகைய தடைகளை களைவது அத்தியாவசியமாகும்..
;.உளரீதியான தனிமனித மாற்றமே விழிப்புணர்வுள்ள சனத்திரளை உருவாக்கும் ஆகவே இன்றைய மனித உரிமைகள் தினத்தில் உரிமைகள் பற்றி ஒவோருவரும் சிந்தித்தல் வேண்டும். ,இந்த உலகில் நம்முடன் பிறந்த பல கோடி பேரும் நம்மைப்போல் உரிமை ,சுதந்திரம் என்பவற்றை சமனாக பெற்றவர்கள் என்பதை ஒவ்வொரு வரும் மனம் கொண்டால் ஆரோக்கியமானதொரு மனித சமுதாயத்தை பிறப்பிக்க இயலும்.
-யதார்தன் -(குணரட்ணம் பிரதீப்)